Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சென்னையில் நாளுக்கு நாள் மோசமாகும் நிலை...

Advertiesment
Chennai
, சனி, 6 ஜூன் 2020 (14:23 IST)
பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கொரோனா நோய் உறுதி செய்யப்பட்டவர்களின் மண்டலவாரி பட்டியல்.
 
நேற்று தமிழகத்தில் 1,438 பேர்களுக்கு புதிதாக கொரோனா தொற்று பரவி இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து தமிழகத்தில் கொரோனா பாதிப்பு உள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 28,694 ஆக உயர்ந்துள்ளது.
 
கொரோனாவால் பாதிப்பு அடைந்த 1,438 பேர்களில் சென்னையில் 1,116 பேர்கள் என்பதால் இதனையடுத்து சென்னையில் கொரோனா பாதிப்பு அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 20,137ஆக உயர்ந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
இந்நிலையில் சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் அதிகபட்சமாக ராயபுரத்தில் இதுவரை 3,552 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து கோடம்பாக்கத்தில் 2,245, தண்டையார்பேட்டையில் 2,470, தேனாம்பேட்டையில் 2,245, அண்ணா நகரில் 1,784, அடையாறில் 1,094, வளசரவாக்கத்தில் 996, அம்பத்தூரில் 733, திருவொற்றியூரில் 731 ஆக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை உள்ளது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தனியார் மருத்துவமனை கட்டணம் எவ்வளவு? தமிழக அரசு அறிவிப்பு!