வக்பு வாரிய சொத்துக்களை ஒரு சில குறிப்பிட்ட நபர்கள் மட்டுமே அனுபவித்து வருவதால், வக்பு சட்ட திருத்த மசோதா கொண்டுவரப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், தமிழ் மாநில முஸ்லிம் லீக் தலைவர் ஷேக் தாவூத் என்பவர், வக்பு வாரியத்திற்கு சொந்தமான ₹3,000 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் தெலுங்கானா எம்பி ஒவைசி இடத்தில் உள்ளதாகவும், தெலுங்கு படங்களில் வரும் காட்சிகளைப் போல அவர் பாராளுமன்றத்தில் நடித்து வருகிறார் என்றும் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வக்பு வாரிய சட்ட திருத்தம் குறித்து அவர் மேலும் கூறியதாவது:
"தன் பெயரில் இல்லாத சொத்தை வக்பு வாரியத்திற்கு எழுத முடியாது" என்று சொல்கிறார்கள். வக்பு வாரியத்தில் பெண்கள் இருவரை உறுப்பினராக சேர்க்க வேண்டும் எனவும், வக்பு வாரியத்திற்கு எழுதி வைத்த சொத்துக்கள் விபரத்தை 90 நாட்களில் ஆன்லைனில் பதிவு செய்ய வேண்டும் எனவும் கூறுகிறார்கள்.
இதுவரைக்கும் பார்த்தால், வக்பு வாரிய சொத்துக்களை யார் எழுதி வைத்திருக்கிறார்கள் என்பது யாருக்கும் தெரியாத மர்மமாகவே உள்ளது. அண்ணா அறிவாலையுமே வக்பு வாரியத்திற்கு சொந்தமானதுதான். தேனாம்பேட்டையில் உள்ள காங்கிரஸ் கட்டிடமும் வக்பு வாரியத்தின் கீழ் தான் வருகிறது. திருச்சியில் இருக்கும் அறிவாலயமும் வக்பு வாரியத்திற்கு சொந்தமானது என அவர் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.