Publish Date: Sun, 25 Aug 2024 (09:21 IST)
Updated Date: Sun, 25 Aug 2024 (09:23 IST)
தனது தம்பி கொலைக்கு காரணமானவர்கள் வீட்டில், அதை நடத்திக் காட்டுவோம் என நடராஜன் என்பவர் பேஸ்புக் பக்கத்தில் பதிவு செய்யப்பட்டதை அடுத்து ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
செங்குன்றம் அடுத்த பாடியநல்லூர் ஊராட்சி மன்ற தலைவர் ஜெயலட்சுமியின் கணவர் நடராஜன் என்பவர் தனது தம்பி கொலைக்கு காரணமானவர்கள் வீட்டில், அதை நடத்திக் காட்டுவோம் என நடராஜன் பேஸ்புக் பக்கத்தில் பதிவு செய்திருந்தார். இந்த பதிவு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் இதுகுறித்து செய்யப்பட்ட புகாரின் அடிப்படையில் நடராஜனை காவல்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.
நடராஜனின் சகோதரும் அதிமுக பிரமுகருமான பார்த்திபன் கடந்தாண்டு ஆகஸ்ட் 17ம் தேதி வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இந்த படுகொலைக்கு பழி வாங்குவோம் என்று ஃபேஸ்புக்கில் பதிவு செய்த நடராஜனிடம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.