Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மீனாட்சி அம்மன் கோவிலில் விதியை மீறிய அமித்ஷா.. காங்கிரஸ் எம்பி கண்டனம்..!

Mahendran
செவ்வாய், 10 ஜூன் 2025 (10:14 IST)
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா கடந்த ஞாயிறு அன்று வருகை தந்த நிலையில், விதிகளை மீறி தடை செய்யப்பட்ட இடத்தில் புகைப்படம் எடுத்துக் கொண்டதாக காங்கிரஸ் எம்.பி. மாணிக் தாகூர் குற்றம் சாட்டியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
மதுரை வந்த மத்திய அமைச்சர் அமித்ஷா, மீனாட்சி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்த நிலையில், அவருக்கு பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. இந்த நிலையில், காங்கிரஸ் எம்.பி. மாணிக் தாகூர் தனது எக்ஸ் (X) பதிவில் கூறியிருப்பதாவது:
 
"நீங்கள் மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வருகை தந்தது நல்ல விஷயம் தான். ஆனால் ஏன் விதிகளை மீற வேண்டும்? தாமரைக் குளம் பகுதியை தவிர, உள்ளே மொபைல்கள் மற்றும் கேமராக்கள் தடை செய்யப்பட்டுள்ளன. ஆனால் நீங்கள் உள்ளே உள்ள இடத்தில் புகைப்படம் எடுத்துள்ளீர்கள்.
 
பொதுமக்களுக்கு ஒரு விதி; மத்திய உள்துறை அமைச்சருக்கு ஒரு விதியா? இந்த பாகுபாடு ஏன்? இந்த விதிமீறல் குறித்து கோவில் நிர்வாகம் விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்." எனத் தெரிவித்துள்ளார்.
 
இதற்கு பாஜக தரப்பிலிருந்து என்ன பதில் சொல்லப் போகிறார்கள் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
 
 
Edited by Mahendran
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாம்சங் நிறுவனத்தின் புதிய கியூ சீரிஸ் சவுண்ட்பார்கள் அறிமுகம்: AI தொழில்நுட்பத்துடன் அசத்தல்!

இந்தியாவில் 100 ஹெக்டேர் பரப்பளவில் தங்கப்புதையல் கண்டுபிடிப்பு! பல லட்சம் டன்கள் என தகவல்..!

டி.சி.எஸ். இன்ப அதிர்ச்சி.. 80% ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு என அறிவிப்பு..!

ராகுல் காந்தியின் தேர்தல் மோசடி குற்றச்சாட்டு.. தலைமை தேர்தல் அதிகாரி முக்கிய கடிதம்..!

கமல்ஹாசன் - மோடி திடீர் சந்திப்பு.. முக்கிய கோரிக்கையை வலியுறுத்தினாரா?

அடுத்த கட்டுரையில்
Show comments