Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

காண்டிராக்டர் சுப்பிரமணி தற்கொலை - நடந்தது என்ன?

காண்டிராக்டர் சுப்பிரமணி தற்கொலை - நடந்தது என்ன?
, வியாழன், 11 மே 2017 (13:03 IST)
நாமக்கல் மோகனூர் ரோட்டில் உள்ள ஆசிரியர் காலனியைச் சேர்ந்தவர் சுப்ரமணி (58). இவர் மருத்துவத்துறை சமம்மந்தமான அரசு கட்டிடங்களை கான்ட்ராக்ட் எடுத்து செய்து வந்தார். 


 

 
தற்போது புதுக்கோட்டை மாவட்டத்தில் அரசு மருத்துவக் கல்லூரி கட்டிட கட்டுமானப் பணியை மேற்கொண்டு வருகிறார். கடந்த ஏப்ரல் மாதம் 7-ம் தேதி தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் வீடு மற்றும் அவரது உறவினர் உள்ளிட்டோருக்கு சொந்தமான குவாரி உள்ளிட்டவற்றில் வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனை மேற்கொண்டனர். அப்போது நாமக்கல் கான்ட்ராக்டர் சுப்ரமணியின் வீட்டிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு பல ஆவணங்களை கைப்பற்றிச் சென்றனர். 
 
சோதனை நடைபெற்ற சமயத்தில் சுப்ரமணி, சிங்கப்பூருக்கு சுற்றுலா சென்றிருந்தார். இதன்காரணமாக சென்னை வருமான வரித்துறை அலுவலகத்திற்கு விசாரணைக்கு வருவதற்கான உத்திரவு வழங்கப்பட்டது. வெளிநாட்டில் இருந்து திரும்பிய சுப்ரமணி கடந்த 1ம் தேதி முதல் 4ம் தேதி வரை சென்னை வருமான வரித்துறை அலுவலகத்திற்கு விசாரணைக்காக சென்று வந்தார். சென்னையில் சுப்ரமணியின் வருமானத்திற்கு அதிகமான சொத்து விபரங்கள் குறித்து அதிகாரிகள் துருவித்துருவி கேள்வி கேட்டதால் அவர் விரக்தியடைந்து காணப்பட்டார்.
 
இந்நிலையில் கடந்த 8ம் தேதி காலை நாமக்கல் மாவட்டம் மோகனூர் அருகே செவிட்டுரங்கன்பட்டியில் உள்ள விவசாய தோட்டத்திற்கு சென்ற சுப்ரமணி தோட்டத்தை சுற்றிப்பார்த்தார். பின்னர் தனது அறைக்கு சென்று ஓய்வெடுத்தார். பின்னர் மயக்கமடைந்த நிலையில் காணப்பட்டார். இதனையடுத்து தோட்டத்தில் இருந்தவர்கள் அவரை மீட்டு நாமக்கல் தனியார் ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். அவரை பரிசோதனை செய்த டாக்டர் சுப்பிரமணி ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். 
 
இதனையடுத்து உயிரிழந்த சுப்பிரமணியத்தின் உடலை பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். டாக்டர்கள் பிரேத பரிசோதனை செய்தபோது அவரது உடலில் விஷம் கலந்துஇருப்பது தெரியவந்தது. இந்நிலையில் நேற்று நாமக்கல் ஆசிரியர் காலனி குடியிருப்பு பகுதியில் உள்ள சுப்பிரமணியத்தின் வீட்டில் மோகனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் இளங்கோ தலைமையிலான போலீசார் மனைவி சாந்தி மற்றும் மகன் சபரிசனிடம் 2 மணி நேரம் துருவி துருவி விசாரணை மேற்கொண்டனர். இதில் சுப்பிரமணியத்தின் மனைவி சாந்தியிடம் வருமானவரித்துறையினர் அதிகாரிகள் சோதனையால் மனநலம் பாதிக்கப்பட்டாரா உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். 
 
ஆனால் எந்த கேள்விக்கும் பதில் அளிக்காமல் சாந்தி பித்துபிடித்தவர் போல காணப்பட்டார். அவரது மகன் சபரீடனிடம் போலீசார் விசாரணை மேற்கொண்ட போது சிலகேள்விகளுக்கு மட்டுமே பதில் அளித்தார். மேலும் சுப்பிரமணியம் தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு வீட்டில் ஏதேனும் கடிதம் எழுதிவைத்துள்ளாரா என போலீசார் சோதனை நடத்தினர். உயர் அதிகாரிகளில் உத்தவின் பேரிலேயே இந்த விசாரணை நடத்தப்பட்டது என போலீசார் இந்நிலையில் இன்று நாமக்கல் A.D.S.P. செந்தில் சுப்பரமணி பண்ணை அவருடைய வீட்டில் விசாரணை செய்து வருகிறார்.

சி.ஆனந்தகுமார் - செய்தியாளர்

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஜெயலலிதாவோ செத்து தொலைந்து விட்டாள்: அமைச்சர் சரோஜாவா இப்படி பேசினார்?