Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எதிர்க்கட்சித் தலைவரை தேர்வு செய்வதில் தொடர்ந்து இழுபறி

Webdunia
வெள்ளி, 7 மே 2021 (19:16 IST)
திமுக கூட்டணி நடைபெற்ற தமிழக சட்டசபைத் தேர்தலில் 159 இடங்களில் வெற்றி பெற்றது. இன்று ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் முதல்வர் முக. ஸ்டாலின் தலைமையிலான திமுக எம்.எல்.ஏக்கள் 34 பேர் தமிழக அமைச்சரவையில் பதவி  ஏற்றுக்கொண்டனர்.

இன்று ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற தேனீர் விருந்தில் அதிமுக சார்பில் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் கலந்துகொண்டார்.

இந்நிலையில் எதிர்க்கட்சித் தலைவர் யார் என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில், அதிமுக சார்பில் எதிர்க்கட்சி தலைவர் தேர்வு செய்வதில் தொடர்ந்து இழுபறி நீடிப்பதாகத் தகவல் வெளியாகிறது.

இதுகுறித்து, அதிமுக கட்சி அலுவலகத்தில் அக்கட்சியின் முக்கிய நிர்வாக்கள் தனியாக ஆலோசித்து வருவதாகத் தெரிகிறது. இந்த ஆலோசனையில் முன்னாள் சிஎம். இபிஎஸ், ஓபிஎஸ், வேலுமணி, தங்கமணி, கே.பி.முனிசாமி , பா. வளர்மதி, நந்தம் விஸ்வநாதன் ஆகியோர் ஈடுபட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சொந்த மகளை கொலை செய்தவர்.. சாட்ஜிபிடி கொடுத்த பொய்யான தகவலால் அதிர்ச்சி..!

உக்ரைன் - ரஷ்யா போலவே காசா மீதும் இஸ்ரேல் தொடர் தாக்குதல்.. பெரும் அதிர்ச்சி..!

ஊடகங்களாவது கேள்வி எழுப்பியிருக்கலாம்: தொகுதி மறுசீரமைப்பு கூட்டம் குறித்து ஆர்.எஸ்.எஸ்..!

கேள்விக்குறியான அமைதி பேச்சுவார்த்தை.. உக்ரைன் மீது ரஷ்யா சரமாரியான தாக்குதல்..!

மார்ச் 24, 25ஆம் தேதிகளில் வங்கி ஊழியர்களின் வேலை நிறுத்தத்தில் திடீர் திருப்பம்.. என்ன நடந்தது?

அடுத்த கட்டுரையில்
Show comments