Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தொடர் விடுமுறை எதிரொலி - விமான கட்டணங்கள் பல மடங்கு உயர்வு.! பயணிகள் அதிர்ச்சி..!!

Senthil Velan
புதன், 14 ஆகஸ்ட் 2024 (13:11 IST)
சுதந்திர தினம் மற்றும் அடுத்தடுத்த விடுமுறை தினங்கள் வருவதால் சென்னையில் இருந்து மதுரை, திருச்சி, தூத்துக்குடி உள்ளிட்ட நகரங்களுக்கு செல்லும் விமானங்களின் கட்டணங்கள் பல மடங்கு உயர்ந்துள்ளன. இதனால் பயணிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
 
நாட்டின் 78வது சுதந்திர தின விழா நாளை கோலாகலமாக கொண்டாடப்பட இருப்பதால் நாடு முழுவதும் முன்னேற்பாடுகள் நடந்து வருகிறது. சுதந்திர தினத்தை தொடர்ந்து சனி, ஞாயிறு விடுமுறைகள் வருகின்றன. தொடர் விடுமுறை வருவதால் சென்னை நகரில் வசிக்கும் பெரும்பான்மையான மக்கள் தங்களுடைய சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு செல்ல தொடங்கி உள்ளனர்.
 
சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் இருந்து, தூத்துக்குடி, மதுரை, திருச்சி, கோவை, சேலம் ஆகிய இடங்களுக்கு செல்லும் விமானங்களில் பயணிகள் கூட்டம் அதிக அளவில் காணப்படுகின்றன. இந்த விமானங்களில் பயணிகள் கூட்டம் அதிக அளவில் இருப்பதன் காரணமாக வழக்கம் போல் விமான டிக்கெட் கட்டணங்களும் பல மடங்கு உயர்ந்துள்ளன.
 
சென்னை - தூத்துக்குடி வழக்கமான கட்டணம் ரூ.4,301 ஆக இருந்த நிலையில்,   இன்றும், நாளையும் ரூ.10,796 ஆக உயர்ந்துள்ளது.
 
சென்னை - மதுரை வழக்கமான கட்டணம் ரூ.4,063 ஆக இருந்த நிலையில்,  இன்றும், நாளையும் ரூ.11,716 ஆக அதிகரித்துள்ளது.
 
சென்னை - திருச்சி வழக்கமான கட்டணம் ரூ.2,382 ஆக இருந்த நிலையில்,  இன்றும், நாளையும் ரூ.7,192 ஆக உயர்ந்துள்ளது.
 
சென்னை - கோவை வழக்கமான கட்டணம் ரூ.3,369 ஆக இருந்த நிலையில்,  இன்றும், நாளையும் ரூ.5,349 ஆக உயர்ந்துள்ளது.
 
சென்னை - சேலம் வழக்கமான கட்டணம் ரூ.2,715 ஆக இருந்த நிலையில்,  இன்றும், நாளையும் ரூ.8,277  ஆக அதிகரித்துள்ளது.

ALSO READ: பாஜகவின் பைக் பேரணிக்கு நிபந்தனையுடன் அனுமதி..! டிஜிபிக்கு உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!
 
விமான கட்டணங்கள் பல மடங்கு உயர்ந்துள்ளதால் பயணிகள் அதிர்ச்சி அடைந்திருந்தாலும், விடுமுறையை சொந்த ஊரில் கழிக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் பயணிகள் போட்டி போட்டுக் கொண்டு விமானங்களில் பயணம் செய்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பக்தர்கள் கொடுத்த 227 கிலோ தங்கம்.. மத்திய அரசிடம் முதலீடு செய்யும் சபரிமலை தேவஸ்தானம்..!

காலிஸ்தான் ஆதரவாளர்களை நாட்டை விட்டு வெளியேற நியூசிலாந்து எச்சரிக்கை.. பரபரப்பு தகவல்..!

அதானி நிறுவனத்துடன் ரூ.5900 கோடி ஒப்பந்தம்.. அதிரடியாக ரத்து செய்த கென்யா அதிபர்..!

ரஜினியை திடீரென சந்தித்த சீமான்.. விஜய்க்கு செக் வைக்கப்பட்டதா?

இஸ்ரேல் ஒரு போர் குற்றவாளி.. பிரதமர் நேதன்யாகுவிற்கு கைது வாரண்ட்!? - சர்வதேச நீதிமன்றம் அதிரடி!

அடுத்த கட்டுரையில்
Show comments