Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

உருண்டு பிரண்டு நூதன ஆர்பாட்டம்: துரைமுருகன் கைதா??

Advertiesment
உருண்டு பிரண்டு நூதன ஆர்பாட்டம்: துரைமுருகன் கைதா??
, திங்கள், 2 மார்ச் 2020 (17:19 IST)
காங்கிரஸ் கட்சியினர் அங்கப்பிரதட்சணம் செய்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர். 

 
நாம் தமிழர் கட்சியின் மாநில இளைஞர் அணியை சேர்ந்த துரைமுருகன், ஸ்ரீபெரும்புதூரில் உள்ள முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் நினைவிடத்தில் டிக்டாக் வீடியோ எடுத்து சமூக வலைத்தளத்தில் பரப்பியுள்ளார். இந்த வீடியோ வைரலானதோடு சர்ச்சையும் ஆகியுள்ளது.  
 
அதாவது, சீமான் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை நாங்கள்தான் கொன்றோம் என்று பொதுக்கூட்ட மேடையில் பேசியதை வைத்து நாம் துரைமுருகன் ராஜீவ்காந்தி நினைவிடத்தில் டிக்டாக் செய்துள்ளார். 
 
எனவே, இது தொடர்பாக காங்கிரஸ் கட்சியினர் ஸ்ரீபெரும்புதூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அதில், நாம் தமிழர் கட்சி நிர்வாகி துரைமுருகனை, தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என குறிப்பிட்டுள்ளனர். 
 
இதோடு நிறுத்தாமல், துரை முருகன் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்யக்கோரி தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகத்தில் காங்கிரஸ் கட்சியினர் அங்கப்பிரதட்சணம் செய்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

டெல்லி கலவரம்… பாஜகவில் இருந்து விலகிய நடிகை !