Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பன்னி சுட்ற துப்பாக்கியால அவன சுட்ருங்க – ராஜேந்திர பாலாஜியின் துடுக்குப் பேச்சு !

Webdunia
செவ்வாய், 24 செப்டம்பர் 2019 (08:57 IST)
அதிமுக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி காங்கிரஸ் மத்திய அமைச்சர் மாணிக் தாகூரை துப்பாக்கியால் சுடுங்கள் எனக் கூறியது தமிழக அரசியலில் சர்ச்சைகளைக் கிளப்பியுள்ளது.

ஜெயலலிதா மறைவுக்குப் பின் அதிமுக அமைச்சர்கள் அனைவரும் பேசும் பேச்சுகள் அதிகமாக சர்ச்சைகளைக் கிளப்பி வருகின்றன. அதுவும் கடந்த சில மாதங்களாக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சர்ச்சையானக் கருத்துகளை தொடர்ந்து பேசி வருகிறார். கடந்த வாரம் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த நேர்காணலில் ’ராகுல் காந்தி இந்தியர் கிடையாது. அவரது தாய் மாமா இத்தாலி காரர். அவருக்கு யார் மடியில் வைத்து காது குத்தியது ?’ எனக் கேட்டு சர்ச்சைகளைக் கிளப்பினார். அவரது இந்த பேச்சு சமூக வலைதளங்களில் வைரலாக ஒரு ரவுண்ட் வர காங்கிரஸ் காரர்கள் எதிர்ப்புத் தெரிவித்து ராஜேந்திர பாலாஜிக்கு எதிராக ஆர்பாட்டங்கள் நடத்தினர்.

இந்நிலையில் நேற்று முன் தினம் விருதுநகர் மாவட்டம் சாத்தூரரில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய ராஜேந்திரபாலாஜி மீண்டும் சர்ச்சையக் கிளப்பும் விதமாகப் பேசியுள்ளார். அதில் விருதுநகர் தொகுதி காங்கிரஸ் எம்.பி. மாணிக் தாகூரைப் பற்றி ‘அவன், ஓட்டுக் கேட்கவும் வரல. நன்றி சொல்லவும் வரல… டெல்லியிலயே உட்காந்திருக்கிறான். இங்க வந்தான்னா பன்னி சுடற துப்பாக்கிய எடுத்து சுட்டுடுங்க…. (ஒரு நிமிடம் யோசித்து) கொன்னுடாதீங்க, ரப்பர் குண்டு போட்டு சுடுங்க. ’ எனக் கூறியுள்ளார்.

ராஜேந்திர பாலாஜியின் இந்த பேச்சால் கோபமடைந்த காங்கிரஸ் காரர்கள் அவர் மேல் காவல் நிலையத்தில் புகார் கொடுக்க இருப்பதாக தெரிகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பிரதமர் மோடியை சந்திக்க அழைப்பு? ஏற்க மறுத்த ஓபிஎஸ்! - அதிர்ச்சியில் பாஜக!

இந்திய முன்னாள் பிரதமர் மகன் குற்றவாளி.. பாலியல் வன்கொடுமை வழக்கில் அதிரடி தீர்ப்பு..!

இந்தியாவின் புதிய குடியரசுத் துணைத் தலைவர் யார்? தேர்தல் தேதி அறிவிப்பு:

அரசாங்க திட்ட விளம்பரத்தில் உங்கள் பெயர் எதற்கு? - ‘உங்களுடன் ஸ்டாலின்’ குறித்து நீதிமன்றம் கேள்வி!

காவல்துறை அதிகாரியின் கன்னத்தில் அறைந்த அமைச்சரின் உறவினர்.. பெரும் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments