Webdunia - Bharat's app for daily news and videos

Install App

போதி தர்மருக்கு சிலை: இதெல்லாம் சாத்தியமா?

Webdunia
வியாழன், 10 அக்டோபர் 2019 (15:10 IST)
காங்கிரஸ் செயல் தலைவர் விஷ்ணுபிரசாத் போதி தர்மருக்கு படே போல பெரிய சிலை அமைக்கப்பட வேண்டும் என கோரியுள்ளார். 
 
வரும் 11 மற்றும் 12 ஆம் தேதி பிரதமர் மோடியும் சீன அதிபரும் மாமல்லபுரத்தில் சந்திக்கவுள்ளதை அடுத்து, பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இந்த சந்திப்பு வரலாற்றின் முக்கிய சந்திப்பாக பார்க்கப்படுகிறது. 
 
இந்நிலையில் காங்கிரஸ் செயல் தலைவர் விஷ்ணுபிரசாத் இது குறித்து பேசியுள்ளார். அவர் கூறியதாவது, மாமல்லபுரத்தில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் சீன அதிபர் ஜின்பிங் ஆகியோர் சந்திக்க இருப்பதை உலக நாடுகள் மிகவும் முக்கிய நிகழ்வாக பார்க்கின்றன.  
 
காஞ்சிபுரம் பல்லவ வம்சத்தில் பிறந்த போதி தர்மர் தனது தத்துவங்களை சீனாவுக்கு போதித்தார். எனவே, சர்தார் வல்லபாய் படேலுக்கு குஜராத்தில் சிலை அமைத்தது போல போதி தர்மருக்கு காஞ்சிபுரத்தில் பிரமாண்ட சிலை அமைக்க வேண்டும்.
 
இதேபோல போதி தர்மர் குறித்த வரலாற்று தகவல்களை அமைக்க வேண்டும். காஞ்சிபுரம் மாவட்டத்தை பிரிக்கும்போது உதயமாகும்  மாவட்டத்துக்கு போதி தர்மர் பெயரை வைக்கவேண்டும். அவர் பெயரில் மருத்துவ பல்கலைக்கழகமும் அமைக்க வேண்டும். 
 
இந்த கோரிக்கைகள் அனைத்தையும் வலியுறுத்தி பிரதமர் நரேந்திர மோடியையும், முதல்வர் எடப்பாடி பழனிசாமியையும் நேரில் சந்தித்து வலியுறுத்துவேன். மேலும் கடிதம் மூலமும் வலியுறுத்த  உள்ளேன். நாடாளுமன்றத்திலும் குரல் கொடுப்பேன் என தெரிவித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

அடுத்த கட்டுரையில்
Show comments