Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

உத்தர பிரதேசத்தில் கடும் பின்னடைவை சந்தித்த காங்கிரஸ்… முன்னணியில் நான்காவது இடம்!

Advertiesment
உத்தர பிரதேசம்
உத்தர பிரதேச தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு வரும் நிலையில் பாஜக முன்னணியில் உள்ளது.

உத்தர பிரதேசம், உத்தரகாண்ட், கோவா, பஞ்சாப், மணிப்பூர் ஆகிய 5 மாநிலங்களுக்கான சட்டமன்ற தேர்தல்கள் பல கட்டங்களாக நடந்து முடிந்தது. தற்போது 5 மாநிலங்களுக்கும் இன்று வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.

தற்போதைய நிலவரப்படி உத்தர பிரதேசத்தில் பாஜகவுக்கும் சமாஜ்வாடி கட்சிக்கும் இடையே முதல் இரண்டு இடங்களுக்கான போட்டியாக நிலவுகிறது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட காங்கிரஸ் கட்சி இதுவரை 5 இடங்களில் மட்டுமே முன்னிலைப் பெற்றுள்ளது. அதேபோல பகுஜன் சமாஜ் கட்சியும் வெறும் 5 இடங்களில் மட்டுமே முன்னிலைப் பெற்றுள்ளது. தற்போது வரை பாஜக 184 இடங்களிலும், சமாஜ்வாதி கட்சி 57 இடங்களிலும் முன்னிலையில் உள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பஞ்சாப்பில் காங்கிரஸ் பின்னடைவு… ஆம் ஆத்மி முன்னிலை!