ஜெயலலிதாவிடம் சரண்டரான ப.சிதம்பரம்
ஜெயலலிதாவிடம் சரண்டரான ப.சிதம்பரம்
ஆர்.கே.நகரில் வெற்றி பெற்ற முதல்வர் ஜெயலலிதாவுக்கு, காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் வாழ்த்து தெரிவித்து சமாதான புறாவை பறக்கவிட்டுள்ளார்.
சென்னை, ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிட்ட அதிமுக பொதுச் செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதா வெற்றி பெற்றார். இந்த நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரம் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து, தமிழக அரசியல் மூத்த தலைவர்கள் சிலரிடம் பேசிய போது, அரசியலில் ப.சிதம்பரமும், முதல்வர் ஜெயலலிதாவும் இந்த நிமிடம் வரை பரம எதிரிகள் ஆவார். முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில், திமுக தூண்டுதலின் பேரில், அவருக்கு எதிராக ப.சிதம்பரம் செயல்பட்டதாக கூறப்படுகிறது.
மத்தியில் காங்கிரஸ் அரசு இந்த போது தான் ஜெயலலிதாவுக்கு மிகவும் நெருக்கடி கொடுத்ததாக கூறப்படுகிறது. அடுத்து, மத்தியில் பாஜக ஆட்சி அமைந்த பின்பு, அதிமுக - பாஜக இடையே நெருக்கம் ஏற்பட்டது. இதனையடுத்து, ப.சிதம்பரம் மகன் கார்திக் சிதம்பரம் மீது 108 ஆம்புலன்ஸ் மோசடி வழக்கு, ப.சிதம்பரம் மனைவி நளினி சிதம்பரம் மீது சாரதா சிட்பண்ட் வழக்கு பாய்ந்தது.
இந்த நிலையில், தமிழகத்தில் திமுக - காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெறும் என நம்பிக்கொண்டிருந்த நிலையில், அதிமுக மகத்தான வெற்றி பெற்று ஜெயலலிதா மீண்டும் முதல்வரானார்.
இனி வரும் காலத்தில் ப.சிதம்பரத்திற்கு பல சோதனைகள் உள்ளது. அதனை தவிர்க்கவே அவர், வெற்றி பெற்ற ஜெயலலிதாவுக்கு வாழ்த்து தெரிவித்து, சமாதானப்புறாவை பறக்கவிட்டுள்ளார். அது எந்த அளவு ஜெயலலிதாவுடம் தாக்கத்தை ஏற்படுத்தும் என பொறுத்த இருந்து தான் பார்க்க வேண்டும் என்கின்றனர்.