ராகுல் கொடுத்த 13 தொகுதிப்பட்டியல் – ஆலோசனையில் திமுக !

Webdunia
சனி, 9 மார்ச் 2019 (13:31 IST)
திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸுக்கு ஒதுக்கப்படவுள்ள 10 தொகுதிகளுக்கான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.

தமிழகத்தில் திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ் இணைந்து 10 தொகுதிகளைப் பெற்றுள்ளது. திமுக கூட்டணியில் உள்ள கட்சிகளிலேயே காங்கிரஸுக்கு மட்டுமே அதிகளவில் தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. திமுக 20 தொகுதிகளிலும் காங்கிரஸ் உள்ளிட்ட மற்ற கூட்டணிக் கட்சிகள் 20 தொகுதிகளிலும் போட்டியிட இருக்கின்றன. ஆனால் இன்னமும் கூட்டணிக் கட்சிகளுக்கான தொகுதிகள் எவை என்பதை திமுக அறிவிக்கவில்லை.

இதையடுத்து காங்கிரஸின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள கூட்டணி கட்சிகளின் பேச்சுவார்த்தைக் குழு இன்று தங்கள் கட்சிக்கு விருப்பமுள்ள 13 தொகுதிகளின் பட்டியலை திமுக தலைமையிடம் ஒப்படைத்துள்ளது. இந்தப் பட்டியல் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் ஒப்புதலுக்குப் பிறகு திமுகவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

மேலும் திமுகவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள பட்டியலில் 10 தொகுதிகளில் காங்கிரஸின் வெற்றிக்கான வாய்ப்புகள் குறித்தும் விளக்கப்பட்டுள்ளது. அந்த 13 தொகுதிகளில் 10 தொகுதிகளைக் காங்கிரஸ் கேட்டுள்ளதாகத் தெரிகிறது. இது சம்மந்தமாக ஆலோசனை நடத்தி வரும் திமுக மற்றக் கூட்டணிக் கட்சிகளோடு ஆலோசித்த பின்னர் விரைவில் காங்கிரஸுக்கான தொகுதிகளை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நவம்பர் 20ல் புதிய கட்சியை தொடங்குகிறார் மல்லை சத்யா.. திராவிடத்தில் இன்னொரு கட்சியா?

மேல்மருவத்தூரில் 57 விரைவு ரயில்கள் தற்காலிக நிறுத்தம் – தெற்கு ரயில்வே அறிவிப்பு!

ஷேக் ஹசீனா குற்றவாளி.. அதிகபட்ச தண்டனை வழங்கப்படும்: வங்கதேச நீதிமன்றம் தீர்ப்பு..!

பிகார் முதலமைச்சர் நிதீஷ் குமார் ராஜினாமா.. மீண்டும் பதவியேற்பது எப்போது?

6 மாதமாக டிஜிட்டல் அரெஸ்டில் இருந்து பெண் மென்பொருள் பொறியாளர்.. ரூ.32 கோடி இழப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments