Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கத்தியை காட்டி மிரட்டி வாக்கு சேகரிப்பு; காங்கிரஸ் வேட்பாளர் கணவர் கைது!

Webdunia
செவ்வாய், 8 பிப்ரவரி 2022 (10:00 IST)
காஞ்சிபுரத்தில் வாக்காளர்களிடம் கத்தியை காட்டி மிரட்டி வாக்கு சேகரித்த காங்கிரஸ் வேட்பாளரின் கணவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தமிழக நகர்புற உள்ளாட்சி தேர்தல் பிப்ரவரி 19ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இந்நிலையில் இறுதி வேட்பாளர் பட்டியல் நேற்று வ்எளியான நிலையில் தேர்தல் வாக்குசேகரிப்பில் வேட்பாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த ராமாபுரம் பகுதியை சேர்ந்த காங்கிரஸ் பிரமுகர் பூபாலனின் மனைவி தனலட்சுமி. இவர் 1வது வார்டில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட விருப்பம் தெரிவித்த நிலையில் காங்கிரஸில் வேறு ஒருவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டதாக தெரிகிறது.

இதனால் பூபாலன் தனது மனைவி தனலட்சுமியை சுயேட்சையாக அந்த வார்டில் போட்டியிட களம் இறக்கியுள்ளார். தற்போது வாக்கு சேகரிப்பு தீவிரமடைந்துள்ள நிலையில் 1வது வார்டுக்கு சென்ற பூபாலன் அங்குள்ள மக்களிடம் கத்தியை காட்டி, தனது மனைவிக்கு வாக்களிக்க வேண்டும் என கூறி மிரட்டியுள்ளார். அங்கு ரோந்து பணியில் இருந்த போலீஸார் பூபாலனை கையும், கத்தியுமாக கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 4 மாவட்டங்களில் வெளுத்து கட்டப்போகும் மழை: வானிலை ஆய்வு மையம்..!

2025ஆம் ஆண்டில் எத்தனை நாள் விடுமுறை? தமிழக அரசு அறிவிப்பின் முழு விவரங்கள்..!

பெண் போலீஸை கணவரே வெட்டி கொலை செய்த கொடூரம்.. தந்தைக்கும் படுகாயம்..!

ஆசிரியை ரமணியை கத்தியால் குத்தியது ஏன்? கைதான மதன்குமார் வாக்குமூலம்..!

நெருப்பில்லாமல் புகையாது: அதானி-தமிழக அரசு ஒப்பந்தம் குறித்து பிரேமலதா..!

அடுத்த கட்டுரையில்
Show comments