காங்கிரஸ் போட்டியிடும் 10 தொகுதிகள் இவைதான்: மேலிடத்திற்கு அனுப்பப்பட்ட பட்டியல்..!

Siva
புதன், 13 மார்ச் 2024 (12:08 IST)
திமுக கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ் கட்சிக்கு தமிழகத்தில் ஒன்பது தொகுதிகள் மற்றும் புதுவை என மொத்தம் பத்து தொகுதிகள் ஒதுக்கப்பட்ட நிலையில் இந்த பத்து தொகுதிகள் குறித்த பட்டியலை தமிழக காங்கிரஸ் டெல்லி மேலிடத்திற்கு அனுப்பி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஏற்கனவே காங்கிரஸ் தமிழகத்தில் போட்டியிட்ட அனைத்து தொகுதிகளும் இந்த பட்டியலில் இடம் பெற்று இருப்பதாக செய்திகள் கசிந்துள்ளது. இந்த பட்டியலை காங்கிரஸ் மேலிடம் சரிபார்த்து சில ஆலோசனைகளை தமிழக காங்கிரஸ் கட்சிக்கு கூறும் என்றும் அதன் பிறகு திமுகவிடம் காங்கிரஸ் போட்டியிட விரும்பும் பத்து தொகுதிகள் குறித்த பட்டியலை அளிக்கும் என்றும் கூறப்படுகிறது

கடந்த தேர்தலில் போட்டியிட்டு வென்ற தொகுதிகளை திமுகவுடன் காங்கிரஸ் கேட்பதாகவும் திமுக அதற்கு கிட்டத்தட்ட ஒப்புக் கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. இதன்படி பார்த்தால் சிவகங்கை தொகுதி மீண்டும் காங்கிரஸ் கட்சிக்கு வந்து விடும் என்று தெரிகிறது. இதனால் சிவகங்கை தொகுதியில் திமுக போட்டியிடாமல் இருப்பதாக திமுகவினர் புலம்பி வருவதாக கூறப்படுகிறது

Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

TVK: முதலமைச்சர் வேட்பாளராக விஜய்!.. அதிர்ச்சியில் அதிமுக!.. தவெக முடிவு சரியா?!...

திருடப்படும் மக்கள் தீர்ப்பு; வாய்திறக்காத தேர்தல் ஆணையம்! முதல்வர் ஸ்டாலின் விமர்சனம்..

ராகுல் காந்தி உண்மையை மட்டுமே பேசுவார்: வாக்குத் திருட்டு மூலம் என்.டி.ஏ. ஆட்சி அமைக்க முயற்சி.. பிரியங்கா காந்தி

"திமுகவுக்குப் போட்டியாளர் த.வெ.க. மட்டும்தான்": 2026 தேர்தல் குறித்து விஜய் அதிரடி

டாக்டர் வீட்டில் திடீர் ரெய்ட்.. கஞ்சா உள்பட ரூ.3 லட்சம் போதைப்பொருள் பறிமுதல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments