18 தொகுதிகளை குறி வைக்கும் காங்கிரஸ்.. 5 தொகுதிகளுக்கு மேல் இல்லை என்கிறது திமுக?

Siva
புதன், 10 ஜனவரி 2024 (07:41 IST)
தமிழகத்தில் காங்கிரஸ் கட்சிக்கு கடந்த தேர்தலில் 10 தொகுதிகள் வழங்கப்பட்ட நிலையில் தற்போது ராகுல் காந்தி பாதயாத்திரைக்கு பின்னர் காங்கிரஸ் வளர்ச்சி பெற்றிருப்பதாகவும் எனவே 18 தொகுதிகளை திமுகவிடம் கேட்டு பெற வேண்டும் என்றும் காங்கிரஸ் பிரமுகர்கள் கூறி வருவது ஏற்படுத்தி உள்ளது.  

தமிழகத்தில் காங்கிரஸ் கட்சிக்கு கடந்த தேர்தலில் திருவள்ளூர், ஆரணி, திருச்சி, கரூர், சிவகங்கை, கிருஷ்ணகிரி, விருதுநகர், கன்னியாகுமரி, தேனி, புதுச்சேரி ஆகிய 10 தொகுதிகள் வழங்கப்பட்டன.

இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் பிரமுகர் ஒருவர் கூறிய போது ராகுல் காந்தியின் ஒற்றுமை பாத யாத்திரைக்குப் பிறகு காங்கிரஸ் கட்சிக்கு தமிழகத்தில் ஆதரவு அளித்துள்ளது. எனவே திமுகவுடன் 18 தொகுதிகளை கேட்டு பெற வேண்டும் என்றும் அதில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
 
ஆனால்  திமுக கூட்டணியில் பாமக, மக்கள் நீதி மய்யம் உள்பட ஒரு சில கட்சிகள் கூடுதலாக வர இருப்பதால்  காங்கிரஸ் கட்சிக்கு ஐந்து தொகுதிகளுக்கு மேல் தர முடியாது என திமுக வட்டாரங்கள் தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பெண் ஐடி ஊழியரை விடுதிக்குள் நுழைந்து பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சி.. மதுரை லாரி டிரைவர் கைது..!

டீக்கடை நடத்துபவரின் வீட்டில் ரூ.1 கோடி ரொக்கம்.. கிலோ கணக்கில் தங்கம்.. 75 வங்கி கணக்குகள்.. என்ன நடந்தது?

கணவரின் தம்பி பிறப்புறுப்பை துண்டித்த அண்ணி! உபியில் ஒரு அதிர்ச்சி சம்பவம்..!

தீபாவளி ஸ்பெஷலாக அறிவிக்கப்பட்டிருந்த 6 சிறப்பு ரயில்கள் ரத்து: என்ன காரணம்?

வங்கக்கடலில் உருவாகிறது புயல் சின்னம்.. சென்னைக்கு ஆரஞ்சு எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments