சாத்தான்குளம் தந்தை-மகன் உயிரிழப்பை ஜாதி பிரச்சனையாக்கும் அரசியல்வாதிகள்

Webdunia
வியாழன், 25 ஜூன் 2020 (11:12 IST)
சாத்தான்குளத்தில் தந்தை-மகன் மரணமடைந்த விவகாரம் தமிழகத்தையே உலுக்கி உள்ள நிலையில் இந்த பிரச்சனையை காங்கிரஸ் மற்றும் பாஜக வினர் ஜாதிப் பிரச்சனையாக கொண்டு சென்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
இது குறித்து காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர் கே எஸ் அழகிரி அவர்கள் விடுத்துள்ள அறிக்கையில் ’ஜெயராஜ் நாடார், பெனிக்ஸ் இம்மானுவேல் நாடார் ஆகியோர் காவல்துறையினரால் அடைத்து வைக்கப்பட்ட போது கடுமையாக தாக்குதலின் காரணமாக இறந்திருப்பதினால் சம்மந்தப்பட்ட காவல்துறையினர் மீது தீவிர விசாரணை நடத்தப்பட வேண்டும்" என்று 
குறிப்பிட்டுள்ளார் 
 
சாத்தான்குளம் சம்பவம் குறித்த செய்திகள் அனைத்து ஊடகங்களிலும் நாடார் என்ற சாதிப் பெயர் இல்லாமல் தான் வந்த நிலையில் கேஎஸ் அழகிரி மட்டும் தனது அறிக்கையில் நாடார் என்ற சாதிப் பெயரை குறிப்பிட்டு அறிக்கை வெளியிட்டது பெரும் கண்டனங்கள் எழுந்துள்ளன
 
இதேபோல் பாஜகவில் சமீபத்தில் இணைந்த சசிகலா எம்பி ’நாடார் சமூகத்தில் சமுதாயத்தில் ஒருவர் மீது பிரச்சனை என்றால் தமிழக பாஜக உங்களோடு நிற்கும்’ என்று பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். பாஜக மற்றும் காங்கிரஸ் ஆகிய இரண்டு கட்சிகளும் இந்த பிரச்சினையை ஜாதிப் பிரச்சனையாக மாற்றுவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

6 மாதமாக மிரட்டி தொடர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பெண்: ஈபிஎஸ் கண்டனம்..!

விஜய் கிரிக்கெட் பால் மாதிரி!.. அவருக்குதான் என் ஓட்டு!.. பப்லு பிரித்திவிராஜ் ராக்ஸ்!...

20 வருடங்களாக வைத்திருந்த உள்துறையை பாஜகவுக்கு தாரை வார்த்த நிதிஷ்குமார்.. என்ன காரணம்?

7ஆம் வகுப்பு மாணவி பள்ளி மாடியில் இருந்து விழுந்து உயிரிழப்பு: ஆசிரியர்கள் மீது பெற்றோர் குற்றச்சாட்டு

கோவை மெட்ரோ.. திருப்பி அனுப்பிய மத்திய அரசின் அறிக்கையில் 3 முக்கிய விளக்கம்.!

அடுத்த கட்டுரையில்
Show comments