Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மக்களுக்காக கவலைப்படக்கூடிய தலைவனாக இருப்பேன்- முதல்வர் முக.ஸ்டாலின்

Advertiesment
MK Stalin
, புதன், 1 மார்ச் 2023 (20:36 IST)
மக்களுக்காகப் போராடுவதற்கு காலமும் நேரமும் கிடையாது என்று   முதல்வர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

முக ஸ்டாலின் அவர்களின் 70-வது பிறந்தநாள் விழா இன்று சென்னை ஒய்எம்சிஏ மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுனா கார்கே, ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா உத்தர பிரதேச மாநிலம் முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ் உள்பட பலர் கலந்து கொண்டுள்ளனர்.

இந்த விழாவில் தமிழ் நாடு முதல்வர் முக.ஸ்டாலின் கூறியதாவது:

''ஸ்டாலின் என்பது நான் மட்டுமல்ல…ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களும் அந்தப் பெயருக்குள் உள்ளனர். முக ஸ்டாலின் எனும் நான் தொண்டனாக இருப்பேன் மக்களுக்காக கவலைப்படக்கூடிய தலைவனாக இருப்பேன் என்று கூறினார்.

மேலும், திமுகவை நிரந்தரமாக ஆட்சிப் பொறுப்பில் வைத்திருப்பேன். நான் முதல்வரக இருக்க வேண்டும்ன் என்பதற்காக இதைக் கூறவில்லை.  கொள்கையைப் பரப்பவும், அக்கொள்கையை நிறைவேற்ற கட்சி மற்றும் ஆட்சி ஆகிய இரண்டின் வழியாக தமிழ் நாட்டை தலை நிமிர வைப்பேன்.

அறிஞர் அண்ணாவைப் போல் எனக்குப் பேசத் தெரியாது; கலைஞரைப் போல் எழுதத்தெரியாது ஆனால், அவர்களைப் போல் உழைக்கத் தெரியும்! எனக்கு வயது 70 ஆகிவிட்டதை என்னால் நம்ப முடியவில்லை. மக்களுக்காகப் போராடுவதற்கு காலமும் நேரமும் கிடையாது; மேலும் பாஜகவை எதிர்க்க அனைத்துக்கட்சிகளும்  ஒன்றிணைய வேண்டும்'' என்று தெரிவித்துள்ளார்.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பெண்களுக்கு மாதம் ரூ.1000: தமிழகத்தை முந்திய மத்திய பிரதேசம்..!