Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாலியல் புகார்களை பெற புகார் குழு.! உயர்கல்வித்துறைக்கு மாநில மகளிர் ஆணையம் அறிவுறுத்தல்.!!

Senthil Velan
திங்கள், 2 செப்டம்பர் 2024 (11:16 IST)
பாலியல் தொந்தரவு குறித்த புகார்களை பெறுவதற்கு பல்கலைக்கழகம், கல்லூரிகளில் புகார் குழு ஒன்றை அமைக்க வேண்டுமென்று மாநில மகளிர் ஆணையம், உயர்கல்வித்துறைக்கு அறிவுறுத்தியுள்ளது.
 
பள்ளி, கல்லூரிகளில் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அளிக்கப்படும் சம்பவம் அதிகரித்து வருகிறது. அதிகரித்துள்ளது. குறிப்பாக கோவை மாவட்டம் வால்பாறையில் அரசு கலைக் கல்லூரியில் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அளிக்கப்படுவதாக மாநில மகளிர் ஆணையத்துக்கு வந்த புகாரின் அடிப்படையில், உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டது. 
 
இந்நிலையில் பல்கலைக்கழகம், கல்லூரிகளில் இதுபோன்ற பாலியல் தொந்தரவு குறித்த புகார்களை பெறுவதற்கு ஏதுவாக ‘உள்ளக புகார் குழு’ ஒன்றை அமைக்க வேண்டும் என மாநில மகளிர் ஆணையம், உயர்கல்வித்துறைக்கு அறிவுறுத்தியிருக்கிறது. இதுதொடர்பாக உயர்கல்வித்துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகளை, மாநில மகளிர் ஆணையம் இன்று நேரில் சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


ALSO READ: விஜய் மாநாடு ஜனவரிக்கு தள்ளிப்போகிறதா? ஜோதிடரை அணுகிய புஸ்ஸி ஆனந்த்..!
 

பல்கலைக்கழகம், கல்லூரிகளில் அமைக்கப்படும் உள்ளக புகார் குழுவில், மாணவிகள் தரப்பில் ஒருவரும், பெண் பேராசிரியர் ஒருவரும், தன்னார்வ தொண்டு நிறுவன உறுப்பினர் ஒருவரும் இடம் பெறவேண்டும் என மாநில மகளிர் ஆணையம் வலியுறுத்த இருப்பதாகவும் கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உத்தவ் தாக்கரே தோல்வி எதிர்பார்த்தது தான்.. அவர் ஒரு அரக்கன்: கங்கனா ரனாவத்

பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் குறித்த புகார்களுக்கு தனி இணையத்தளம்: தவெக தலைவர் விஜய்

இன்னும் சில நிமிடங்களில் நாடாளுமன்ற கூட்டம்: பத்திரிக்கையாளர்களை சந்திக்கும் பிரதமர் மோடி!

கூகிள் மேப்பை நம்பி இடித்த பாலத்தில் பயணம்! ஒட்டு மொத்தமாக பலியான பயணிகள்! - உத்தர பிரதேசத்தில் சோகம்!

அடுத்த கட்டுரையில்