கரூர் அரசு கலைக்கல்லூரியில் அரசை ஏமாற்றி வேலை பார்த்துக் கொண்டிருக்கும் ஆசிரியரின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முன்னாள் மாணவர்கள் கோரிக்கை. கல்லூரியில் 2021 ஆம் ஆண்டு புவி அமைப்பியல் துறை சார்பாக 40 மாணவர்கள் கரிகாலன் மீது 15 லட்சம் ரூபாய் பணம் ஏமாற்றி உள்ளார் என்று கல்லூரி முதல்வர் அவர்களிடம் புகார் மனு கொடுத்திருந்தார்கள்.
இதை அறிந்த வரலாற்று துறை ஆசிரியர் முனைவர் மாறன் மற்றும் கரிகாலன் அவர்கள் வெளியே இருந்து ஆற்றலை கூட்டி வந்து முதல்வர் அறைக்கு சென்று முதல்வர் அனுமதி இல்லாமல் அந்த புகார் மனுக்களை அனைத்தையும் முதல்வரை மிரட்டி நகலெடுத்துச் சென்று விட்டார்கள். இது வந்து சட்டப்படி குற்றமாகும். இது சம்பந்தமாக நாங்கள் கல்லூரி கல்வி இயக்குனர் அப்போது இருந்த கல்லூரி கல்வி இணை இயக்குனர் அவரிடம் புகார் மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. முனைவர் மாறன் அவர்கள் 2005 to 2015 வரை கரூர் அரசு கலைக்கல்லூரியில் கௌரவ விரிவுரையாளராக வரலாற்று துறையில் பணியாற்றி உள்ளார். இவர் 2006 ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் நடைபெற்ற பஞ்சாயத்து தேர்தலில் திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட பித்தளைப்பட்டி ஊராட்சி மன்ற தேர்தலில் வார்டு உறுப்பினராக போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார்.
அதே சமயத்தில் பித்தளைப்பட்டி ஊராட்சி மன்ற துணைத் தலைவராகவும் பதவி வகித்துள்ளார்.இது சம்பந்தமாக அனைத்து ஆதாரங்களும் ஆத்தூர் ஒன்றிய அலுவலகத்திலும் பித்தளைப்பட்டி ஊராட்சி மன்ற அலுவலகத்திலும் உள்ளது. அதே காலகட்டத்தில் கரூர் அரசு கலைக் கல்லூரியில் கௌரவ விரிவுரையாளர் வரலாற்று துறையில் வேலை பார்த்து உள்ளார். 2015 ஆம் ஆண்டு கரூர் அரசு கலைக் கல்லூரியில் டிஆர்பி மூலம் நிரந்தர ஆசிரியராக வேலைக்கு சேர்ந்துள்ளார். அப்போது தவறான ஆவணங்களை கொடுத்து வேலைக்கு சேர்ந்துள்ளார். 2006 to 2009 வரை கல்லூரியில் கௌரவ விரிவுரையாக பணியாற்றியதற்கான பணி அனுபவ சான்று 4 வருடங்களுக்கு பெற்று 8 மதிப்பெண்களை பெற்று டிஆர்பிக்கு சமர்ப்பித்து உள்ளார் .இதன் மூலம் அவர் முறைகேடாக வேலை பெற்றது உறுதியாகி உள்ளது.
இவர் அப்போது தமிழ்நாடு அரசு உயர்கல்வித்துறை மற்றும் டிஆர்பி, கல்லூரி முதல்வர் அவர்களை ஏமாற்றி தான் ஊராட்சி மன்றத் துணைத் தலைவராக இருந்ததை மறைத்து நிரந்தர பணியில் சேர்ந்து உள்ளார். ஒரே காலகட்டத்தில் இரண்டு இடங்களில் சம்பளம் பெற்றுக் கொண்டு இரண்டு பதவிகளை அரசுக்கு தெரியாமல் வகித்துள்ளார். இவை தமிழ்நாடு அரசு பணியாளர் சட்டத்திற்கு எதிரானது என்பதை உங்களிடம் தெரிவித்துக் கொள்கின்றோம். இது சம்பந்தமாக கரூர் மாவட்ட ஆட்சியர் அவர்கள், தமிழ்நாடு அரசு முறையாக விசாரணை நடத்தி தவறு செய்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாணவர்கள் சார்பாக கேட்டுக்கொள்கின்றோம் என்று சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.