Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

வனத்துறையின் அனுமதியின்றி இறந்த ஒட்டகத்தை புதைத்ததாக புகார்!

வனத்துறையின் அனுமதியின்றி இறந்த ஒட்டகத்தை புதைத்ததாக புகார்!

J.Durai

, சனி, 27 ஜூலை 2024 (19:31 IST)
புதுச்சேரி, வம்பாகீரப்பாளையம் பகுதியில் பாண்டி மெரினா கடற்கரை உள்ளது. 
 
இங்கு தனியார் சார்பில் பல்வேறு பொழுதுபோக்கு நிகழ்வுகள்,ஒட்டகம், குதிரை சவாரிகள் நடைபெற்று வருகிறது.
 
இதனிடையே சவாரிக்கு பயன்படுத்தப்பட்டு வந்த ஒட்டகம் உயிரிழந்தது.
 
இதையடுத்து அந்த தனியார் நிர்வாகத்தைச் சேர்ந்தவர்கள் ஒட்டகம் இறந்தது குறித்து காவல்துறை, வனத்துறை உள்ளிட்ட யாருக்கும் தகவல் தெரிவிக்காமல் துறைமுகத்துக்கு சொந்தமான இடத்தில் ஒட்டகத்தை பள்ளம் தோண்டி புத்தததாக கூறப்படுகிறது.  
 
இது குறித்து அறிந்த தனியார் அமைப்பினர் ஒதியஞ்சாலை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் பாண்டி மெரினா கடற்கரைக்கு வந்த புதுச்சேரி வட்டாட்சியர் பிரத்திவி, ஒதியஞ்சாலை காவல் ஆய்வாளர் செந்தில்குமார் முன்னிலையில் ஜே.சி.பி இயந்திரம் மூலம் புதைக்கப்பட்ட ஒட்டகம் தோண்டி எடுக்கப்பட்டு புதுச்சேரி அரசு கால்நடைத்துறை மருத்துவர்களை கொண்டு பிரேத பரிசோதனை செய்ய கடிதம் அனுப்புவதாக போலீஸார் தெரிவித்தனர். 
 
இதன் பின்னர் தோண்டப்பட்ட ஒட்டகம் மீண்டும் அதே இடத்தில் புதைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து நாளை அல்லது திங்கட்கிழமை மீண்டும் தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை செய்ய இருப்பதாக கூறப்படுகிறது. அதன்பின்பு ஒட்டகம் எதனால் இறந்தது என்பது தெரிய வரும் என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வீட்டின் பூட்டை உடைத்து 43 பவுன் நகை மற்றும் 1.50 லட்சம் ரூபாய் பணம் கொள்ளை!