சென்னை கிண்டி கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனையில் பணிபுரிந்து வரும் மருத்துவர் பாலாஜியை கத்தியால் குத்திய விக்னேஷ் என்ற இளைஞரின் தாயார் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை கிண்டி அரசு மருத்துவமனையில் மருத்துவர் பாலாஜியை விக்னேஷ் என்ற இளைஞர் கத்தியால் குத்திய நிலையில் அவர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் தன்னை பற்றி அவதூறு கருத்துக்களை பரப்பி வரும் விக்னேஷின் தாய் பிரேமா மற்றும் சகோதரர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மருத்துவர் ஜாக்லின் மோசஸ் என்ற மருத்துவர் சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மருத்துவர் பாலாஜி சரியாக சிகிச்சை அளிக்காததால் உடல்நிலை மோசமானதாக கருத்து பரப்பப்பட்டு வருகிறது என்று மருத்துவர் ஜாக்லின் மோசஸ் தனது புகாரில் தெரிவித்துள்ளார்.
மருத்துவர் பாலாஜியை கத்தியால் குத்திய விக்னேஷின் தாயார் மற்றும் சகோதரர் மீது நுரையீரல் சிகிச்சை அளித்த மருத்துவர் மோசஸ் புகார் அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த புகார் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
Edited by Mahendran