Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்: திமுகவுக்கு மேலும் ஒரு கட்சி ஆதரவு

Webdunia
திங்கள், 27 நவம்பர் 2017 (15:58 IST)
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இருக்கும் வரை இடைத்தேர்தலாக இருந்தாலும், பொதுத்தேர்தலாக இருந்தாலும் முதலில் வேட்பாளர் அறிவிப்பு என்பது அதிமுகவில் இருந்துதான் இருக்கும். ஆனால் இந்த முறை திமுக முந்தி கொண்டது. தேர்தல் அறிவிப்பு வெளியான மறுநாளே மருதுகணேஷை திமுக, ஆர்.கே.நகர் வேட்பாளராக அறிவித்தது
 
அதுமட்டுமின்றி திமுக வேட்பாளருக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்று அதன் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் மற்ற கட்சி தலைவர்களிடம் தொலைபேசியில் பேசி ஆதரவு திரட்டி வருகிறார். அதன்பயனாக விடுதலைச்சிறுத்தைகள் கட்சி, திமுக வேட்பாளருக்கு ஆதரவு அளித்துள்ளது. மேலும் திமுகவின் கூட்டணி கட்சியான காங்கிரஸ் கட்சியும் ஆதரவு கொடுத்துள்ளது
 
இந்த நிலையில் தற்போது இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் திமுகவுக்கே தங்கள் ஆதரவு என்று அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இன்று நடைபெற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில நிர்வாகிகள் குழு கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு கொடுத்ததை அடுத்து மார்க்கிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் ஆதரவு தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஏப்ரல் மாத ராசிபலன்கள், செய்ய வேண்டிய பரிகாரங்கள்! – மகரம்!

காஷ்மீர் மாநிலத்தின் முதல் வந்தே பாரத் ரயில்.. பிரதமர் திறந்து வைக்கும் தேதி அறிவிப்பு..!

நான் வங்கப்புலி; முடிந்தால் என்னோடு மோதிப் பாருங்கள் சவால் விட்ட மம்தா பானர்ஜி..!

தாய்லாந்துக்கு எந்த உதவி வேண்டுமானாலும் செய்ய தயார்: பிரதமர் மோடி அறிவிப்பு..!

பாங்காக் நிலநடுக்கம்: 30 மாடி கட்டிடம் இடிந்து தரைமட்டம்.. 43 பேரை காணவில்லை..!

அடுத்த கட்டுரையில்
Show comments