Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை அதிரடியாக குறைப்பு!

Advertiesment
gas cylinder
, வெள்ளி, 1 ஜூலை 2022 (07:29 IST)
வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை அதிரடியாக குறைப்பு!
சென்னையின் கடந்து கடந்த சில மாதங்களாக வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை மற்றும் வீட்டு உபயோகத்திற்கான சிலிண்டர் விலை ஏற்றம் கண்டது என்பதும் இதனால் பொதுமக்கள் மற்றும் வணிகர்கள் மிகப்பெரிய சிக்கலில் இருந்து வருகிறார்கள் என்பது தெரிந்ததே 
 
இந்த நிலையில் தற்போது 19 கிலோ எடை கொண்ட வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலையை மத்திய அரசு அதிரடியாக குறைந்துள்ளது. ஒரு சிலிண்டருக்கு 187 ரூபாய் குறைந்துள்ளதை அடுத்து தற்போது வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டரின் விலை 2186 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
சென்னையில் வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை ரூபாய் 2373 விற்கப்பட்ட நிலையில் தற்போது 187 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளதால் வணிகர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்து உள்ளனர் 
 
ஆனால் அதே நேரத்தில் வீட்டு பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை குறைக்கப்படவில்லை என்பது பொதுமக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

55.25 கோடியை தாண்டியது உலக கொரோனா பாதிப்பு!