Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இந்த டிரிப் அடி கொஞ்சம் ஓவரோ... சரண்டரான காயத்ரி ரகுராம் தரப்பு?

இந்த டிரிப் அடி கொஞ்சம் ஓவரோ... சரண்டரான காயத்ரி ரகுராம் தரப்பு?
, வியாழன், 21 நவம்பர் 2019 (13:23 IST)
திருமாவளவன் பேசிய பல கருத்துகள் எங்களுக்குப் பிடிக்கும் என்று காயத்ரி ரகுராம் தரப்பில் திடீர் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது வியப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் இந்து மதம் குறித்து பேசிய கருத்துக்கள் சர்ச்சையை ஏற்படுத்தின. இதற்கு பலர் கண்டனம் தெரிவித்த நிலையில் உடனடியாக திருமாவளவன் தனது பேச்சுக்கு விளக்கம் கொடுத்து வருத்தமும் தெரிவித்தார். 
 
இருப்பினும் அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலான நிலையில், திருமாவின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து ட்விட்டரில் பதிவிட்ட பாஜக ஆதரவாளரான காயத்ரி ரகுராம் அவரை பற்றி அவதூறான வார்த்தைகளை உபயோகித்தார். 
 
இதனால் விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த பலர் காயத்ரி வீட்டின் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் தனக்கு திருமா கட்சியை சேர்ந்த சிலர் அவதூறான வார்த்தைகளால் திட்டுவதாக காயத்ரி ட்விட்டரில் பதிவிட்டார்.
webdunia
மேலும் இதுபோன்ற அச்சுறுத்தல்களுக்கு தான் பயப்படப் போவதில்லை எனவும், இந்து மதம் குறித்து விவாதிக்க விரும்பினால் நேரில் தன்னை சந்திக்கலாம் என்றும் காயத்ரி ரகுராம் தனது ட்விட்டரில் தெரிவித்திருந்தார்.
 
இதனைத்தொடர்ந்து அவரது ட்விட்டர் கணக்கு திடீரென முடக்கப்பட்டுள்ளது. விசிகவினர் தொடர்ந்து ரிப்போர்ட் அடித்ததால் அந்த கணக்கு முடக்கப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. இந்நிலையில் காயத்ரி ரகுராம் தரப்பில் இது குறித்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அவர்கள் தெரிவித்தாவது, 
 
இங்கே எல்லா கடவுளும் ஒன்றுதான். ஒவ்வொரு மதத்தினரும் ஒவ்வொரு வடிவத்தில் கடவுளைத் தரிசிக்கிறோம். இந்துக்களும் அப்படித்தான். கோயில் அசிங்கம் என சொல்வது எப்படி நியாயமாக இருக்கும்? 
 
அந்தவகையில் திருமாவளவனின் அந்தப் பேச்சு காயத்ரி ரகுராமுக்கு மனக்கஷ்டத்தைக் கொடுத்திருக்கிறது. அதனால் அவர் தனது கருத்தை அப்படி வெளிப்படுத்தியிருக்கிறார். 
 
பொதுவாக அரசியல் கட்சித் தலைவர் திருமாவளவன் பேசிய நல்ல பல கருத்துகள் எங்களுக்குப் பிடிக்கும். ஆனால் இந்த விஷயத்தில் ஏன் இப்படி காயத்ரி ரகுராம் பேசினார் எனத் தெரியவில்லை என திடீர் விளக்கம் அறிவித்துள்ளனர். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

காடு வா வா, வீடு போ போங்கர காலத்துல கூட்டணி: பங்கமாய் கலாய்த்த அமைச்சர்!