உ.பி.யில் காவி நிறத்திற்கு மாறிய அம்பேத்கர் சிலை

Webdunia
செவ்வாய், 10 ஏப்ரல் 2018 (08:58 IST)
உத்திர பிரதேசத்தில் கடந்த மாதம் மர்ம நபர்களால் சேதப்படுத்தப்பட்ட டாக்டர் அம்பேத்கரின் சிலைக்கு காவி நிற பெயிண்ட் அடிக்கப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் தலைவர்களின் சிலைகளை மர்ம நபர்கள் சேதப்படுத்துவது வாடிக்கையாகி வருகிறது. தமிழகத்தில் பெரியார் சிலை, கேரளாவில் காந்தி சிலை சேதப்படுத்தப்பட்டது.
 
இந்நிலையில் கடந்த மாதம் உத்திர் பிரதேச மாநிலம், படாவுன் மாவட்டத்தில் அம்பேத்கர் சிலையை  மர்ம நபர்கள் உடைத்தனர். அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவின் காட்சிகளை வைத்து  போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். 
 
இதனையடுத்து படாவுன் நகரில் சேதப்படுத்தப்பட்ட அம்பேத்கர் சிலை மாவட்ட நிர்வாகத்தால் சீரமைக்கப்பட்டுள்ளது. நீல நிறத்தில் இருந்த அம்பேத்கர் சிலைக்கு தற்போது காவி நிற வர்ணம் அடிக்கப்பட்டுள்ளது. இதற்கு பல்வேறு அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஓட்டு கேட்க வந்த வேட்பாளரை கல்லால் எறிந்து விரட்டிய பொதுமக்கள்: பீகாரில் பரபரப்பு..!

பொறுத்திருந்து பாருங்கள்.. எல்லாமே சர்பிரைஸாக நடக்கும்: சசிகலா பேட்டி..!

17 குழந்தைகளை கடத்தி பிணை கைதிகளாக பிடித்து வைத்த நபர்.. காவல்துறையின் அதிரடி நடவடிக்கை..!

காலையில் குறைந்த தங்கம், மாலையில் திடீர் உயர்வு.. தற்போதைய நிலவரம்..!

டிரம்பை எதிர்த்து கேள்வி கேட்கும் தைரியம் பிரதமர் மோடிக்கு இல்லை: ராகுல் காந்தி விமர்சனம்

அடுத்த கட்டுரையில்
Show comments