Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஸ்டெர்லைட் ஆலை போராட்டம்: களத்தில் குதித்த கல்லூரி மாணவர்கள்

Webdunia
திங்கள், 26 மார்ச் 2018 (10:01 IST)
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தூத்துக்குடி மாவட்டத்தில் நடைபெற்று வரும் போராட்டம் கடந்த சில நாட்களாக தீவிரமாக இருந்து வரும் நிலையில் தற்போது தூத்துக்குடி பகுதியில் உள்ள கல்லூரி மாணவர்களும் போராட்டக்களத்தில் குதித்துள்ளதால் போராட்டத்தின் தீவிரம் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது

தூத்துக்குடியில் இயங்கி வரும் ஸ்டெர்லைட் ஆலையால் அந்த பகுதி மக்களுக்கு புற்றுநோய் உள்பட பலவித நோய்கள் ஏற்படுவதாக கூறி அந்த ஆலையை மூடும்படி அப்பகுதி மக்கள் கடந்த பல ஆண்டுகளாக போராடி வருகின்றனர். இந்த நிலையில் அடுத்த ஆண்டுடன் ஸ்டெர்லைட் ஆலையின் ஒப்பந்தம் முடிவடையவுள்ள நிலையில் மத்திய அரசு அந்த ஒப்பந்தத்தை நீடித்துள்ளது மட்டுமின்றி இன்னொரு ஆலை ஏற்படுத்தவும் முடிவு செய்துள்ளது.

இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பகுதி மக்கள் மத்திய அரசுக்கு கடுமையான எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிர்ப்பு தெரிவித்து  வ.உ. சிதம்பரனார் கல்லூரி வாசல் முன் திரண்ட மாணவர்கள் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கோஷங்களை எழுப்பியபடி போராட்டம் செய்து வருகின்றனர். இதனை அறிந்த மற்ற கல்லூரி மாணவர்களும் போராட்டத்தில் குதிக்கவுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது மிண்டும் ஒரு மெரீனா போராட்டம் போன்ற ஒரு போராட்டம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால் இந்த பிரச்சனை குறித்து மத்திய மாநில அரசுகள் இதுகுறித்து எந்தவித கருத்தும் தெரிவிக்காமல் உள்ளது என்பது குறிப்ப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழகத்தில் இன்று எத்தனை மாவட்டங்களில் மழை பெய்யும்: வானிலை எச்சரிக்கை..!

சென்னை கடற்கரை - தாம்பரம் புறநகர் ரயில் சேவை ரத்து: கூடுதல் பேருந்துகள் இயக்க நடவடிக்கை..!

ஐதராபாத்தில் தலைமறைவாக இருந்த கஸ்தூரி கைது.. சென்னை போலீசார் அதிரடி..!

இன்டாகிராமில் வந்த லிங்க்: க்ளிக் செய்த அடுத்த நிமிடத்தில் பணத்தை இழந்த இளம்பெண்..

ஸ்டெர்லைட் தடையை மறுஆய்வு செய்ய கோரிய மனு : உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments