Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

காதலை ஏற்க மறுத்த கல்லூரி மாணவி கட்டையால் தாக்கி கொலை

காதலை ஏற்க மறுத்த கல்லூரி  மாணவி கட்டையால் தாக்கி கொலை
, செவ்வாய், 30 ஆகஸ்ட் 2016 (18:06 IST)
கரூரில்  இயங்கி வரும்  கரூர்  இன்ஜினியரிங்  தனியார்  கல்லூரி மாணவியை  சக மாணவன்  காதலிக்க  வற்புறுத்தி  உருட்டு கட்டையால் மண்டையில்  தாக்கியதில் பலத்த காயமடைந்த  மாணவி  மதுரை அப்போலோ  மருத்துவமனையில்  சிகிச்சை பலனின்றி பரிதாபமாக  உயிரிழந்தார்.  


 

 
தப்பியோடிய  மாணவனை  கரூர் நகர காவல்துறையினர் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர். மேலும் இந்த சம்பவத்தால் கரூரில் பரப்பரப்பு ஏற்பட்டுள்ளது. 
 
ராமநாதபுரம்  மாவட்டம்,  பரமக்குடியருகில் உள்ள வெங்களுரை சேர்ந்தவர் பெரியசாமி., இவரது மகன் உதயகுமார் (24). இவர் கரூர் இன்ஜினியர் தனியார் கல்லூரியில்  மூன்றாம் ஆண்டு  படித்து வருகிறார்.  
 
இதே கல்லூரியில் 2ம் ஆண்டு படித்துவந்த சிவகங்கை மாவட்டம்., மானமதுரையை சேர்ந்த கண்ணன் என்பவரது மகள் சோனாலி (21). இவரை உதயகுமார் ஒருதலைப்பட்சமாக காதலித்துவந்துள்ளார். காதலை உதயகுமர் கூறியதற்கு சோனாலி ஏற்றகமறுத்துவிட்டார். மேலும் உதயகுமார் கல்லூரியில் விரும்பதாகத செயல்களில் ஈடுபட்டதால் கல்லூரி நிர்வாகம் அவரை கல்லூரியில் இருந்து நிறுத்திவிட்டது. 
 
இந்நிலையில் பல மாதங்கள் பிறகு செவ்வாய்கிழமையன்று காலை கல்லூரிக்கு வந்த உதயகுமார், தான் மீண்டும் கல்லூரியில் இணைந்துவிட்டதாக கூறி கல்லூரிக்குள் சென்றுள்ளார். 
 
நேராக சோனாலியின் வகுப்பறைக்கு சென்று தன்னை காதலிக்குமாறு மீண்டும் வற்புறுத்தியுள்ளார். இதனை சோனாலி மறுத்துள்ளார். இதில் ஆத்திரமடைந்த உதயகுமார் கையில் வைத்திருந்த பெரிய கட்டையால் சோனலியின் தலையில் கடுமையாக தாக்கியுள்ளார். இதனால் சோனாலி இரத்தவெள்ளத்தில் மயங்கிவிழுந்துவிட்டார். 

webdunia

 

 
இதனை சகமாணவ மாணவிகள் மற்றும் பேராசிரியர்கள் தடுத்த போது அவர்களையும் தாக்கியுள்ளார்.  இதனை பார்த்து பயந்துபோன சகமாணவிகள் கல்லூரி பேராசிரியர்களுக்கு தகவல் தெரிவித்தனர்.
 
அதன்பின் ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு கரூரில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் தீவிர சிகிச்சைபிரிவில் சோனாலி சிகிச்சைக்கு அனுமதிக்கப்ட்டார். பிறகு மேல்சிகிச்சைக்கு மதுரையில் உள்ள அப்போலோ மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி மாணவி சோனாலி பரிதாபமாக உயிரிழந்தார். 
 
உதயகுமார் மாணவியை தாக்கிவிட்டு அதிக நேரமாக கல்லூரி வளாகத்திலேயே கட்டையுடன் இருந்துள்ளார். நீண்ட நேரத்திற்கு பிறகுதான் தப்பி ஓடிவிட்டார். 
 
மாணவி தாக்குதலுக்குண்டான பிறகு கல்லூரி நிர்வாகம் கல்லூரிக்கு இரண்டு நாட்கள் விடுமுறை அறிவித்துவிட்டது. கல்லூரியில் இருந்துவந்த மாணவர்கள் கல்லூரியின் முன்பு நின்று கல்லூரிக்கு பாதுகாப்பு ஏற்படுத்திட கல்லூரி நிர்வாகம் நடவடிக்கை எடுத்திட வேண்டும் என கோஷமிட்டனர். இதனையடுத்து மாணவர்களிடம் கல்லூரி நிர்வாகம் சுமூக பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து அனைவரும் கலைந்துசென்றனர். 
 
கல்லூரியில் பாதுகாப்பு குறைபாடு மாணவர்கள் குற்றசாட்டு:
 
இதுகுறித்து கல்லூரி மாணவர்கள் கூறும் போது கல்லூரியில் ஒருவர் தனியாக கட்டையுடன் வந்து நூற்றுக்கணக்கான மாணவ மாணவிகள் மற்றும் பேரசிரியர்கள் இருக்கும் இடத்தில் வகுப்பறையில் சக மாணவியை கடுமையாக தாக்கிவிட்டு தப்பிஓடிவிட்டார். 
 
இக்கல்லூரியில் எவ்வித பாதுகாப்பு வசதியும் இல்லை. மாணவி பாதிக்கப்பட்டவுடன் அவரை மருத்துவமனைக்கு கொண்டுசெல்ல எவ்வித வாகன வசதியும் கல்லூரியில் இல்லை. பிறகு ஆம்புலன்ஸ்க்கு தெரிவிக்கபட்டடு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டியுள்ளது. இதனால் அதிக நேரம் வீணானது. எனவே கல்லூரி நிர்வாகம் இக்கல்லூரியில் அதிக பாதுகாப்பு ஏற்பாடு செய்யவேண்டும் என கோரிக்கைவிடுத்துள்ளனர்.  
பின்னர் இதையடுத்து கரூர் நகர காவல்துறையினரின் தீவிர சோதனையில் அந்த உதயகுமார் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகின்றது.
 
சி.ஆனந்தகுமார் – செய்தியாளர் – கரூர் மாவட்டம்
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

காய்கறிகளை பறிமுதல் செய்த நகராட்சி அதிகாரிகள்