Publish Date: Wed, 16 Mar 2022 (16:29 IST)
Updated Date: Wed, 16 Mar 2022 (16:32 IST)
சென்னையை அடுத்துள்ள செங்குன்றம் அருகில் உள்ள பாடிய நல்லூர் என்ற பகுதியி ஒரு கல்லூரி மாணவி( 17) பெற்றோருடன் வசித்து வந்தார்.
பொன்னேரியில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் பிகாம் முதலாமாண்டு படித்து வரும் அந்த மாணவி கடந்த 12 ஆம் தேதி வீட்டிலிருந்து கல்லூரிக்குச் சென்றுள்ளார். அதன்பின்னர் மாலை வீட்டிற்கு வரவில்லை; மாணவியைக் காணவில்லை என பெற்றோர் செங்குன்றம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இதுகுறித்து வழக்குபதிவு செய்து போலீஸார் மாணவியைத் தேடி வந்தனர். பின்னர் செங்குன்றம் மொண்டியம்மன் நகர் நேரு தெருவைச் சேந்த சந்தோஷ்(18) என்ற இளைஞருடன் மாணவி சென்றது தெரியவந்தது.
மேலும், சந்தோஸ் மாணவியை ஆந்திராவுக்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்தது. பின்னர் மாணவியை மீட்டு குற்றவாளி சந்தோஷைக் கைது செய்துள்ளனர்.