Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மாணவி சத்யாவின் தந்தை விஷம் குடித்து தற்கொலையா? அதிர்ச்சி தகவல்!

Advertiesment
parangimalai
, வெள்ளி, 14 அக்டோபர் 2022 (10:46 IST)
கல்லூரி மாணவி சத்யா நேற்று ரயிலின் மீது தள்ளிவிடப்பட்டு கொலை செய்யப்பட்ட நிலையில் அவரது தந்தை மாணிக்கம் மாரடைப்பு காரணமாக காலமானார் என்ற செய்தி வெளியானது
 
 
இந்த நிலையில் தற்போது கல்லூரி மாணவி சத்யாவின் தந்தை விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டிருப்பதாக விசாரணையில் தெரிய வந்துள்ளதால் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது
 
சென்னை பரங்கிமலையில் ஓடும் ரயிலில் தள்ளி கொலை செய்யப்பட்ட மாணவியின் தந்தை மாணிக்கம் என்பவரிடம் மகள் இறந்த துக்கம் தாங்காமல் மதுவில் விஷம் கலந்து தற்கொலை செய்து கொண்டதாக முதல் கட்ட விசாரணையில் தெரியவந்தது
 
விஷம் கலந்த மதுவை குடித்த அவருக்கு நெஞ்சு எரிச்சல் ஏற்பட்டதாகவும் இதனையடுத்து அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது அவர் உயிரிழந்ததாகவும் காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

Nokia G11 Plus ஸ்மார்ட்போன் எப்படி? விலை கட்டுபடி ஆகுமா??