Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பள்ளி மாணவர்களுக்கு கொரோனா! – ஆட்சியர்களுடன் இன்று அவசர ஆலோசனை!

Webdunia
புதன், 8 செப்டம்பர் 2021 (08:41 IST)
தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில் மாணவர்கள் கொரோனாவால் பாதிக்கப்படுவது குறித்து இன்று முக்கிய ஆலோசனை மேற்கொள்ளப்பட உள்ளது.

தமிழகத்தில் கொரோனா காரணமாக பல காலமாக பள்ளிகள் திறக்கப்படாமல் இருந்து வந்த நிலையில் கடந்த 1ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்டு சுழற்சி முறையில் வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் பல்வேறு மாவட்டங்களில் மாணவர்கள் சிலருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்ட பள்ளிகள் மட்டும் மூடப்பட்டுள்ளன.

இந்நிலையில் பள்ளிகளை தொடர்ந்து நடத்துவது, கட்டுப்பாடுகளை அதிகரிப்பது குறித்து தலைமை செயலாளருடன் மாவட்ட ஆட்சியர்களின் அவசர ஆலோசனை கூட்டம் இன்று நடைபெறுகிறது. இதில் பள்ளிகள் தொடர்ந்து இயங்குவது குறித்த முக்கிய முடிவுகள் பரிந்துரைக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

போரை நிறுத்தியது நான்தான்! ஆனா க்ரெடிட் தர மாட்றாங்க! - தென்னாப்பிரிக்க அதிபரிடம் சீன் போட்ட ட்ரம்ப்!

குழந்தையின் கழுத்தை அறுத்து கொலை செய்த நபர்.. ஜாமின் வாங்கி கொடுத்த வக்கீல் குழந்தையும் கொலை..!

க்ரீன் கார்டு வைத்திருந்தாலும் வெளியேற்றலாம்.. அமெரிக்க நீதிமன்ற உத்தரவால் இந்தியர்கள் அதிர்ச்சி..!

தொடர் ஏற்றத்திற்கு பின் திடீரென சரிந்த தங்கம்.. இன்றைய சென்னை நிலவரம்..!

டாடா, அம்பானி கூட செய்யாத சாதனை.. ஒரே நேரத்தில் 50000 ஊழியர்களுக்கு பதவி உயர்வு..!

அடுத்த கட்டுரையில்
Show comments