Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மேட்டூர் அணையில் இருந்து வெளியேறும் 1.70 லட்சம் கன அடி நீர்: பொதுமக்களுக்கு எச்சரிக்கை

Webdunia
வியாழன், 16 ஆகஸ்ட் 2018 (08:05 IST)
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் மேட்டூர் அணையில் ஒருசில அடிகள் மட்டுமே தண்ணீர் இருந்ததால் விவசாயத்திற்கு கூட தண்ணீர் திறந்துவிடப்படவில்லை. ஆனால் கர்நாடக மாநிலத்தில் திடீரென பெய்த கனமழையால் மேட்டூர் அணை தனது முழு கொள்ளளவை அடைந்தது. அதேபோல் கேரளா உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் கனமழை பெய்து வருவதால் மேட்டூர் அணைக்குக் தண்ணீரின் அளவு அதிகரித்துள்ளது.
 
இந்த நிலையில் மேட்டூர் அணைக்கு தற்போது நீர்வரத்து 1.60 லட்சம் கனஅடியாக இருப்பதாகவும், அணையில் இருந்து நீர் திறப்பு 1.70 லட்சம் கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேட்டூர் அணையில் இருந்து அதிகப்படியான நீர் வெளியேறி வருவதால் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள மக்களுக்கு வெள்ள எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. 
 
மேட்டூர் அணையில் நீர் திறப்பு அதிகரிப்பால் கரையோரமாக உள்ள 16 கிராம மக்களுக்கு மாவட்ட ஆட்சியர் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளார். உடனடியாக அந்த பகுதி மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை சாலையோர வியாபாரிகளுக்கு அடையாள அட்டை.. நாளை சிறப்பு முகாம்..!

விஸ்வநாதன் ஆனந்தின் மாமனாரிடம் மோசடி செய்ய முயற்சி.. சைபர் கிரைம் போலீசில் புகார்..!

17 ஆயிரம் வாட்ஸ் அப் கணக்குகள் முடக்கம்: மத்திய அரசு அதிரடி நடவடிக்கை..!

அதானி நிறுவனத்திற்கும் தமிழக மின்வாரியத்திற்கும் தொடர்பு இல்லை: அமைச்சர் செந்தில் பாலாஜி

இன்றிரவு 8 மாவட்டங்களில் இடி மின்னலுடன் மழை: வானிலை ஆய்வு மையம் தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments