Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் கவலைக்கிடம்: எய்ம்ஸ் மருத்துவமனை அறிக்கை

Webdunia
வியாழன், 16 ஆகஸ்ட் 2018 (07:34 IST)
முன்னாள் இந்திய பிரதமர் வாஜ்பாய் கடந்த சில மாதங்களாக உடல்நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் சமீபத்தில் அவரது உடல்நிலை மோசமானதால் எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்தனர்
 
இந்த நிலையில் முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் உடல்நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும், கடந்த 24 மணி நேரத்தில் அவரது உடல்நிலை மிகவும் மோசமடைந்துள்ளதாகவும் எய்ம்ஸ் மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.
 
பிரதமர் நரேந்திரமோடி உள்பட அரசியல் தலைவர்கள் எய்ம்ஸ் மருத்துவமனை சென்று வாஜ்பாய் உடல்நிலை குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தனர். விரைவில் அவர் குணமாக வேண்டும் என்று அரசியல் தலைவர்கள் கூறி வருகின்றனர்.
 
கடந்த 1998ஆம் ஆண்டு முதல் 2004ஆம் ஆண்டு வரை இந்திய பிரதமராக வாஜ்பாய் பதவி வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

நிதி நிறுவனங்களில் 72 மணி நேரம் சோதனை.! ரூ.170 கோடி மதிப்பிலான சொத்துக்கள் பறிமுதல்.!!

நாகை - இலங்கை கப்பல் போக்குவரத்து சேவை மீண்டும் ஒத்திவைப்பு.! பயணிகள் ஏமாற்றம்.!!

டீசல் பரோட்டாவா? என்ன கருமம் இது!? – வைரலான வீடியோ! மன்னிப்பு கேட்ட யூட்யூபர்!

ஜம்முவில் பயங்கரவாதிகள் ஊடுருவ முயற்சி..! நான்கு பேர் சுட்டு கொலை..!!

மனிதன் உணர்ந்து கொள்ள இது உண்மையான தேர்தல் அல்ல..!அதையும் தாண்டி கொடூரமானது.! நடிகர் மன்சூர் அலிகான்..!!

அடுத்த கட்டுரையில்
Show comments