Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

காலி சரக்கு பாட்டிலை சேர்த்து டெபாசிட் பணம் : மது குடிப்போர் சங்கம் அதிரடி

காலி சரக்கு பாட்டிலை சேர்த்து டெபாசிட் பணம் : மது குடிப்போர் சங்கம் அதிரடி

Advertiesment
Thanjavur election
, புதன், 26 அக்டோபர் 2016 (12:11 IST)
தஞ்சாவூர் தொகுதியில் நடக்க உள்ள சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும், மது குடிப்போர் சங்க வேட்பாளர், வித்தியாசமான முறையில் பணம் திரட்டி டெபாசிட் செய்ய முடிவெடுத்துள்ளார்.


 

 
தஞ்சாவூர், அரவக்குறிச்சி மற்றும் திருப்பரங்குன்றம் தொகுதிகளில், வருகிற நவம்பர் 19ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. அதற்கான வேட்பு மனுத் தாக்கல் இன்று தொடங்கியது.
 
இந்நிலையில், தஞ்சாவூர் தொகுதியில் தமிழ்நாடு மதுகுடிப்போர் விழிப்புணர்வு சங்கத்தின் சார்பில் ஆறுமுகம் என்பவர் போட்டியிடுகிறார். தேர்தலில் போட்டியிட டெபாசிட் பணம் திரட்ட, அந்த சங்கத்தினர் ஒரு வித்தியாசமான முடிவை எடுத்துள்ளனர்.


 

 
அதாவது, நாளை தஞ்சாவூர் செல்லும் ஆறுமுகம், அங்கு உள்ள டாஸ்மாக் கடைகளில் மது அருந்துபவர்களிடம் காலி பாட்டில்கள், வாட்டர் பாக்கெட்டுகள், டம்ளர்கள் ஆகியவற்றை சேர்த்து அதை கயலான் கடையில் போட்டு, அதன் மூலம் கிடைக்கும் பணத்தில் டெபாசிட் தொகையை அவர் கட்ட இருக்கிறாராம்..
 
இதன்மூலம், கண்ட இடங்களில் காலி பாட்டில்கள் மற்றும் பிளாஸ்டிக் கழிவுகளை கொட்டி, டெங்கு போன்ற நோய்களை பரவ விடமால் தடுக்க விழிப்புணர்வு ஏற்படுத்துவோம் என்று மது குடிப்போர் விழிப்புணர்வு சங்கம் அறிவித்துள்ளது.
 
இது எப்படி இருக்கு?...

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ரேஷன் கார்டுடன் ஆதார் எண் இணைப்பு குறித்த புதிய அறிவிப்பு