Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்னும் நாலு பேருக்கு கொரோனா வந்தால் சந்தை மூடப்படலாம் – ஆபத்தில் கோயம்பேடு சந்தை!

Webdunia
திங்கள், 27 ஏப்ரல் 2020 (12:43 IST)
சென்னை கோயம்பேடு சந்தையில் வியாபாரிகள் இருவருக்கு கொரோனா உறுதியானதை தொடர்ந்து மேலும் கொரோனா பாதிப்புகள் கண்டறியப்பட்டால் சந்தையை மூட வேண்டி வரும் என காவல்துறை ஆணையர் தெரிவித்துள்ளார்.

தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ள நிலையில் ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. அத்தியாவசிய பொருட்கள் விற்கும் கடைகள் தொடர்ந்து செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில் கோயம்பேடு மார்க்கெட் பகுதியில் இரண்டு வியாபாரிகளுக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கோயம்பேடு மார்க்கெட்டை இடம் மாற்றுவது குறித்து இன்று மாநகராட்சி ஆணையர் ஆலோசித்த நிலையில் வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்ததால் ஆலோசனை கூட்டம் மீண்டும் நாளை நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து பேசிய காவல்துறை ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் “ஊரடங்கு அறிவிக்கப்பட்ட நாள் தொட்டு ஒருநாள் கூட கோயம்பேடு மார்க்கெட்டில் சமூக இடைவெளி கடைபிடிக்கப்படவில்லை. இரண்டு பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ள நிலையில் மேலும் நான்கு பேருக்கு கொரோனா இருப்பது தெரியவந்தால் கோயம்பேடு மார்க்கெட்டை மூட வேண்டி வரும்” என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

இந்த ஆண்டு கடுமையான மழை இருக்கு.. அந்தமானில் தொடங்கியது தென்மேற்கு பருவமழை!

ஞாபகம் இருக்கிறதா.! பால்கனியிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை.! தாய் தற்கொலை..!!

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

ராமரின் பக்தர்களுக்கும் துரோகிகளுக்கும் இடையிலான போர் தான் மக்களவை தேர்தல்: யோகி ஆதித்யநாத்

அடுத்த கட்டுரையில்
Show comments