Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொங்கு மண்டலத்தை கோட்டைவிட்ட திமுக; கடுப்பில் ட்ரெண்டாகும் #முட்டாள்கோவையனுங்க

Webdunia
திங்கள், 3 மே 2021 (08:46 IST)
தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில் பெருவாரியான இடங்களை பிடித்த திமுக கோவை மண்டலத்தில் செல்வாக்கை பெறாத நிலையில் ட்விட்டரில் ஹேஷ்டெகுகள் ட்ரெண்டாகி வருகின்றன.

தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவுகள் நேற்று வெளியான நிலையில் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக கூட்டணி 159 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்க உள்ளது. அதிமுக கூட்டணி 75 இடங்களே பெற்று தோல்வியை தழுவியுள்ளது.

தலைநகர் சென்னையின் அனைத்து தொகுதிகளிலும் திமுக வெற்றி தடம் பதித்தாலும், கொங்கு மண்டல பிரதான மாவட்டமான கோயம்புத்தூரில் கிணத்துகடவு தவிர அனைத்து தொகுதிகளிலும் திமுக கூட்டணி தோல்வி முகமாக உள்ளது. இந்நிலையில் கோவை தோல்வியை மையப்படுத்தி ட்விட்டரில் #முட்டாள்கோவையனுங்க என்ற ஹேஷ்டேகை சிலர் ட்ரெண்ட் செய்து வருகின்றனர். இதற்கு மறுமொழி அளிக்கும் வகையில் பதிவிட்டுள்ள கோவை பகுதியை சேர்ந்த சிலர் மக்கள் தாங்கள் விரும்பிய ஒருவரை தங்கள் பிரதிநிதியாக்க வாக்களித்த நிலையில் அவர்களை முட்டாள் என பேசுவதா என்று அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

36 நிமிடங்களில் கேதார்நாத் பயணம்: புதிய ரோப் கார் திட்டத்திற்க்கு அனுமதி..!

மனைவிக்கு பதிலாக கவுன்சிலராக கணவர்கள். பதவியேற்பில் நடந்த கேலிக்கூத்து..!

நெல்லை பஸ் ஸ்டாண்ட் பிளாட்பாரத்தில் கட்டுகட்டாக பணம்.. அதன்பின் நடந்த ட்விஸ்ட்..!

ஏற்காடு மலைப்பாதை பயணத்திற்கு திடீர் தடை.. காவல்துறையினர் அதிரடி..!

சென்னை கடற்கரை - தாம்பரம் இடையே 16 மின்சார ரயில்கள் ரத்து.. எந்தெந்த தேதிகளில் ?

அடுத்த கட்டுரையில்
Show comments