Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

திருப்பூரில் கல்லூரி மாணவிக்கு சீட் கொடுத்ததா காங்கிரஸ்: உண்மை இதுதான்!

Advertiesment
திருப்பூரில் கல்லூரி மாணவிக்கு சீட் கொடுத்ததா காங்கிரஸ்: உண்மை இதுதான்!
, புதன், 2 பிப்ரவரி 2022 (16:19 IST)
திருப்பூரில் கல்லூரி மாணவிக்கு சீட் கொடுத்ததா காங்கிரஸ்: உண்மை இதுதான்!
திருப்பூரில் உள்ள வார்டு தேர்தலில் கல்லூரி மாணவிக்கு காங்கிரஸ் கட்சி சீட் கொடுத்ததாக முன்னணி ஊடகங்களில் செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கும் நிலையில் உண்மையில் அவர் கல்லூரி மாணவியா என்பது குறித்த தகவலை நெட்டிசன்கள் தெரிவித்துள்ளனர் 
 
திருப்பூர் மாநகராட்சி 55வது வார்டில் கவுன்சிலர் தேர்தலில் போட்டியிட 22 வயது சட்டக்கல்லூரி மாணவி தீபிகா அப்புகுட்டிக்கு காங்கிரஸ் கட்சியை வாய்ப்பு வழங்கி உள்ளதாக செய்திகள் வெளியானது 
 
ஆனால் உண்மையில் அவர் கல்லூரி மாணவியாக இருந்தாலும் திருப்பூர் முன்னாள் மேயர் விசாலாட்சி மகள் என்பதும் முன்னாள் மேயர் மகள் என்பதால் தான் காங்கிரஸ் கட்சி அவருக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கொடுத்துள்ளதாகவும் நெட்டிசன்கள் கூறியுள்ளனர் 
 
மேலும் தீபிகாவின் பிரச்சாரத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி என்ற பட்டியலில் திமுக சிபிஐ சிபிஎம் மதிமுக ஆகிய கட்சிகள் மட்டுமே குறிப்பிடப்பட்டு உள்ளன என்பதும் கூட்டணி கட்சிகளில் ஒன்றான விடுதலை சிறுத்தைகள் கட்சி குறிப்பிடப்படாதது ஏன் என்ற கேள்வியையும் நெட்டிசன்கள் எழுப்பியுள்ளனர்.
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

டெல்லி அரசின் உத்தரவு அபத்தமானது: உயர்நீதிமன்றம் கண்டனம்!