Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இன்று முதல் கோயம்புத்தூர் வருபவர்களுக்கு இ பாஸ் கட்டாயம்!

Advertiesment
இன்று முதல் கோயம்புத்தூர் வருபவர்களுக்கு இ பாஸ் கட்டாயம்!
, செவ்வாய், 9 மார்ச் 2021 (07:30 IST)
கேரளாவில் இருந்து கோயம்புத்தூர் வருபவர்களுக்கு இ பாஸ் கட்டாயம் என சொல்லப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்திருந்த நிலையில் கடந்த சில தினங்களாக மீண்டும் தொற்று எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து வருகிறது. இந்நிலையில் இப்போது தொற்றைக் குறைக்கும் நடவடிக்கையாக வெளிநாடுகள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து தமிழகத்துக்குள் நுழைபவர்கள் இ பாஸ் கட்டாயம் எடுக்க வேண்டும் என தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் ராஜாமணி இன்று முதல் கேரளாவில் இருந்து கோயம்புத்தூர் வருபவர்கள் இ பாஸ் கட்டாயமாக வைத்திருக்க வேண்டும் என்றும், தமிழகத்தில் சென்று திரும்புவர்களும் இ பாஸ் மற்றும் கொரோனா இல்லை என்ற சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும் என அறிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

11.77 கோடியை தாண்டிய உலக கொரோனா பாதிப்பு!