300 கோடி மோசடி செய்த கும்பலிடமிருந்து கோடிக்கணக்கான பணம் மற்றும் ஆவணங்களை பறிமுதல் செய்த- குற்றப்பிரிவு போலீசார்..

J.Durai
வியாழன், 9 மே 2024 (12:28 IST)
கோவையை சேர்ந்த சிவராஜ் என்பவர் பீளமேடு பகுதியில் மின் காற்றாலை அலுவலகத்தை நடத்தி வருகிறார்.
 
தொழில் அதிபரான இவரது அலுவலகத்தில் பணிபுரிந்த 13 பேர் சிவராஜ்க்கு சொந்தமான சுமார் 200 கோடி ரூபாய் சொத்துக்களுக்கு போலி ஆவணம் தயார் செய்தும் 100 கோடி ரூபாய் பணத்தையும் மோசடி செய்துள்ளனர்.
 
மோசடி செய்ததை அறிந்த சிவராஜ் கோவை மாநகர மத்திய குற்றப்பிரிவு போலீசாரிடம் புகார் அளித்துள்ளார்.
 
புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலிசார் மோசடியில் ஈடுபட்ட வசந்த்,சிவகுமார்,ஷீலா, தீக்ஷா ,சக்தி சுந்தர் என மொத்தம் ஐந்து பேரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
 
இதனை தொடர்ந்து குற்றவாளிகளை காவலில் எடுத்து விசாரித்த கோவை மாநகர குற்றப்பிரிவு காவல் துறையினர் இன்று குற்றவாளிகளிடமிருந்து சுமார் 12 கோடி பணம்,140 பவுன் நகை,100 கோடி மதிப்பிலான முக்கிய ஆவணங்களை போலீசார் கைப்பற்றி, வங்கி கணக்குகளை முடக்கம் செய்துள்ளனர்.
 
இதனை தொடர்ந்து போலீசார்  நீதிமன்றத்தில் பணம் மற்றும் ஆவணங்களை ஒப்படைத்து மீண்டும் குற்றவாளிகளை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அறுவை சிகிச்சை செய்தாலும் படுக்கையில் இருந்து வேலை செய்ய வேண்டும்.. மேனேஜர் அழுத்தத்தால் பெண் அதிர்ச்சி..!

எம்ஜிஆர் பெயரை விஜய் சொல்வது எங்களுக்கு சந்தோசம் தான்.. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்..!

கொடியேற்றத்துடன் தொடங்கியது திருவண்ணாமலை தீபத் திருவிழா.. பக்தர்கள் பரவசம்..!

22 மாவட்டங்களில் இன்று கனமழை.. நெருங்கி வருகிறதா காற்றழுத்த தாழ்வு மையம்?

பொளந்து கட்டிய கனமழை.. இன்று எந்தெந்த பகுதிகளில் பள்ளிகள் விடுமுறை?

அடுத்த கட்டுரையில்
Show comments