Publish Date: Mon, 27 Dec 2021 (11:37 IST)
Updated Date: Mon, 27 Dec 2021 (11:42 IST)
கோவையில் காலையில் அரசு பேருந்தில் லாரி மோதிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோயம்புத்தூர் அருகே சிறுமுகையில் அரசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது மூன்று சாலைகள் சந்திக்கும் பகுதியில் பேருந்து சென்றுக் கொண்டிருந்தபோது பக்கவாட்டு சாலையிலிருந்து வந்த லாரி ஒன்று வளைவில் வேகமாக வந்து பேருந்தின் மீது மோதியது.
லாரி வேகமாக மோதியதில் பேருந்து கவிழ்ந்து விழுந்தது. இதனால் 30க்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்தனர். அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் போலீஸார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.