Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

உள்ளாட்சி தேர்தலை அடுத்து கூட்டுறவு சங்க தேர்தல் தேதி அறிவிப்பு!

Advertiesment
உள்ளாட்சி தேர்தல்
ஊரக உள்ளாட்சிகளுக்கு மட்டும் தேர்தல் அறிவிக்கப்பட்டு அந்தத் தேர்தலும் நடத்தப்பட்டு தேர்தல் முடிவுகளும் சமீபத்தில் வெளிவந்தன என்பதை ஏற்கனவே பார்த்தோம் இந்த நிலையில் நகராட்சி, மாநகராட்சிகளுக்கு தேர்தல் எப்போது என அரசியல் கட்சிகளும் பொதுமக்களும் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.
 
இந்த நிலையில் உள்ளாட்சி தேர்தலை அடுத்து தற்போது கூட்டுறவு சங்க தேர்தல் அறிவிப்பு வெளியாகி உள்ளது. கூட்டுறவு சங்க தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் ஜனவரி 27-ஆம் தேதி தொடங்கும் என்றும், வேட்புமனுக்கள் ஜனவரி 28ஆம் தேதி பரிசீலனை செய்யப்படும் என்றும், ஜனவரி 29ஆம் தேதி வேட்பு மனுவை வாபஸ் பெற கடைசி நாள் என்றும், அறிவிக்கப்பட்டுள்ளது 
 
மேலும் கூட்டுறவு சங்க தேர்தலில் வாக்குப்பதிவு பிப்ரவரி 3ம் தேதி நடைபெறும் என்றும், வாக்கு எண்ணிக்கை அதன் மறு நாளான பிப்ரவரி 4-ஆம் தேதி நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கூட்டுறவு சங்க தலைவர், துணைத் தலைவர் பதவிகளுக்கான தேர்தல் பிப்ரவரி எட்டாம் தேதி நடைபெறும் என்றும் கூட்டுறவு சங்க தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது
 
 இதனை அடுத்து இந்த தேர்தலுக்கு அதிமுக மற்றும் திமுக கட்சிகள் தயாராகி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

காஷ்மீர், முஸ்லிம்கள் பற்றிய விமர்சனத்தால் மலேசியாவுக்கு இந்தியா பதிலடி: இறக்குமதிக்கு கட்டுப்பாடு