மெட்ரோ ரயில் நிலையங்கள் போல் மாறும் பறக்கும் ரயில் நிலையங்கள்: விரைவில் டெண்டர்..!

Webdunia
வியாழன், 31 ஆகஸ்ட் 2023 (10:56 IST)
மெட்ரோ ரயில் நிலையங்கள் போல் விரைவில் பறக்கும் ரயில் நிலையங்களை மாற்ற திட்டமிட்டுள்ளதாக சிஎம்டிஏ முடிவு செய்துள்ளது. இதற்கான டெண்டர் விரைவில் வெளியாகும் என்றும் செய்திகள் வெளியாகி உள்ளன.
 
பறக்கும் ரயில் நிலையங்களை மறு சீரமைப்பு செய்து மெட்ரோ ரயில் நிலையங்கள் போல் மாற்ற சிஎம்டிஏ முடிவு செய்துள்ளதாகவும், இதற்கான வரைவு புரிந்துணர்வு ஒப்பந்தத்தை ரயில்வே வாரியத்திடம் தமிழக அரசு சமர்ப்பித்துள்ளதாகவும் செய்தி வெளியாகியுள்ளது.
 
மேலும் மந்தைவெளி, கீரின்வேஸ் சாலை, கோட்டூர்புரம், திருவான்மியூர், தரமணி, பெருங்குடி, வேளச்சேரி ரயில் நிலையங்கள் மறுசீரமைக்கப்படும் என்றும், இதற்கான ஒப்புதல் கிடைத்தவுடன் விரைவில் டெண்டர் கோரப்பட்டு, மறுசீரமைப்பு பணிகள் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
மேலும் ஒருசில பறக்கும் ரயில் நிலையங்களுடன் மெட்ரோ ரயில் நிலையங்களை இணைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

10 நாட்கள் தங்கம் விலையில் மாற்றமே இல்லை.. எதிர்காலத்தில் ஏறுமா? இறங்குமா?

ஜப்பானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்.. சுனாமி எச்சரிக்கை விடப்பட்டதால் பரபரப்பு..!

நீதிபதி சுவாமிநாதன் பணியில் இருந்து நீக்க நோட்டீஸ்? இந்தியா கூட்டணி திட்டம்?

ஓபிஎஸ்ஐ அடுத்து திடீரென டிடிவி தினகரனை சந்தித்த அண்ணாமலை.. என்ன திட்டம்?

இன்று புதுச்சேரியில் விஜய்யின் பொதுக்கூட்டம்.. க்யூ ஆர் கோடு அடையாள அட்டை இருப்பவர்களுக்கு மட்டுமே அனுமதி..!

அடுத்த கட்டுரையில்
Show comments