Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தினமனுவுக்கு எனது வன்மையான கண்டனங்கள்! தினமலர் செய்தி குறித்து முதல்வர் ஸ்டாலின்..!

Advertiesment
Stalin
, வியாழன், 31 ஆகஸ்ட் 2023 (10:52 IST)
காலை உணவு திட்டம் குறித்து சர்ச்சைக்குரிய செய்தியை வெளியிட்ட தினமலர் நாளிதழுக்கு தமிழக முதல்வர் முக ஸ்டாலின் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது:
 
உழைக்க ஓர் இனம் - உண்டு கொழுக்க ஓர் இனம் என மனுவாதிகள் கோலோச்சிய காலத்தில் 'எல்லார்க்கும் எல்லாம்' எனச் சமூகநீதி காக்க உருவானதுதான்  திராவிடப் பேரியக்கம். 
 
'சூத்திரனுக்கு எதைக் கொடுத்தாலும் கல்வியை மட்டும் கொடுத்து விடாதே' என்பதை நொறுக்கி, கல்விப்புரட்சியை உருவாக்கிய ஆட்சி திராவிட இயக்க ஆட்சி.
 
நிலவுக்குச் சந்திரயான் விடும் இந்தக் காலத்திலேயே சனாதனம் இப்படியொரு தலைப்புச் செய்தியைப் போடுமானால், நூறு ஆண்டுகளுக்கு முன் என்ன ஆட்டம் ஆடியிருக்கும்? எளியோர் நிலை எப்படி இருந்திருக்கும்? இன்னமும் அந்த வன்மம் மறையவேயில்லை! 
 
Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

விம்கோ நகர் - விமான நிலையம் மெட்ரோ ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்!