Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உங்களை நேரில் சந்திக்க வேண்டும்: பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதிய முதல்வர் ஸ்டாலின்..!

Siva
புதன், 2 ஏப்ரல் 2025 (09:54 IST)
பிரதமர் மோடியை நேரில் சந்திக்க தமிழக முதல்வர் முக ஸ்டாலின் நேரம் கேட்டு கடிதம் எழுதி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:

தற்போதுள்ள மக்கள் தொகைக்கு ஏற்ப நாடாளுமன்றத் தொகுதிகள் சீரமைக்கப்பட்டால், தமிழ்நாடு உள்பட தென் மாநிலங்களில் தொகுதி எண்ணிக்கை குறைய வாய்ப்பு உள்ளதால், 25 ஆண்டுகளுக்கு தொகுதி மறுசீரமைப்பு செய்வதை தள்ளி வைக்க வேண்டும் என்றும், தொகுதி மறுசீரமைப்பால் தமிழ்நாடு உள்பட தென் மாநிலங்களுக்கு ஏற்படும் பாதிப்பு குறித்த எங்களின் கவலைகள் மற்றும் கருத்துகளை மனுவாக அளிக்க வேண்டும்.

மேலும், சென்னையில் நடைபெற்ற நியாயமான தொகுதி மறுசீரமைப்பு நிர்ணயத்திற்கான கூட்டு நடவடிக்கைக் குழு கூட்டத்தின் தீர்மானங்களை தமிழகத்தின் பல்வேறு கட்சிகளின் எம்.பி.க்களுடன் சேர்ந்து, உங்களை நேரில் சந்தித்து ஆலோசனை நடத்த வேண்டும்.

முன்னர் குறிப்பிட்டது போல, நாட்டின் கூட்டாட்சிக்கும், தமிழ்நாட்டின் உரிமைக்கும் தொகுதி மறுசீரமைப்பு என்ற பெயரால் ஏற்பட்டிருக்கும் பேராபத்தை எதிர்த்து ஒற்றை நோக்கத்தோடு கட்சி, அரசியல் வேறுபாடுகளுக்கு அப்பால் எங்களின் ஒன்றுபட்ட நிலைப்பாட்டை தெரிவிக்க நாங்கள் அவசரமாக உங்களை சந்தித்து ஆலோசனை நடத்த நேரம் கோருகிறோம். உங்கள் விரைவான பதிலுக்காக காத்திருக்கிறோம் என்று முதல்வர் தனது கடிதத்தில் கூறியுள்ளார்

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாம்பையே கடித்து கொன்ற 1 வயது குழந்தை.. பெற்றோரை அதிர்ச்சி அடைய வைத்த சம்பவம்..!

வயநாடு நிலச்சரிவில் குடும்பத்தில் 11 பேரை இழந்த இளைஞர்.. ஜூலை 30 என்ற பெயரில் உணவகம்..!

ஓட்டப்பந்தயத்தில் மயங்கி விழுந்த வீராங்கனை.. ஆம்புலன்ஸில் அழைத்து சென்றபோது பாலியல் பலாத்காரம்..!

திமுக ஆட்சியில் காவல்துறையினருக்கே பாதுகாப்பு இல்லை. எஸ்.ஐ. ராஜாராமன் மறைவு குறித்து ஈபிஎஸ்

தமிழகம் வரும் பிரதமர் மோடியிடம் முதல்வர் ஸ்டாலின் அளிக்க இருக்கும் மனு.. என்ன கோரிக்கை?

அடுத்த கட்டுரையில்
Show comments