Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்புடன் சாதிவாரியான கணக்கெடுப்பு: முதல்வர் ஸ்டாலின் கடிதம்..!

Advertiesment
MK Stalin
, சனி, 21 அக்டோபர் 2023 (10:55 IST)
தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்புடன் சாதிவாரியான கணக்கெடுப்பினை இணைத்து நடத்திட வேண்டும் என பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
 
சாதி தொடர்பான தரவு உள்ளீடுகளுடன் மேற்கொள்ளப்பட்டால் மட்டுமே சமூக நீதி மற்றும் சமத்துவத்தை நிலைநாட இயலும் என்றும், சமமான மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சியை உறுதி செய்ய முடியும் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
 
 இந்தியாவில் 2021 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு நடைபெறாத நிலையில் வரவிருக்கும் தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பின்போது  ஜாதிவாரியான கணக்கெடுப்பினை இணைத்து நடத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்வதாகவும் மாநில அளவில் இதற்கான நல்ல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருந்தாலும் நாடு முழுவதும் சட்டபூர்வ மக்கள் தொகை கணக்கெடுப்பு மேற்கொண்டால் மட்டுமே சமூகநீதி சமத்துவம் நிலைநாட்டிட இயலும் என்றும் முதல்வர் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
 
Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தரைவழித் தாக்குதலுக்கு தயாராகும் இஸ்ரேல்? பொதுமக்கள் அகற்றப்படுவதால் பதட்டம்..!