Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பா.ஜ.க.வின் கொத்தடிமையாக தரையில் ஊர்ந்து கொண்டிருக்கிறார் பழனிசாமி: முதல்வர் ஸ்டாலின் கண்டனம்..!

Webdunia
செவ்வாய், 8 ஆகஸ்ட் 2023 (10:14 IST)
பா.ஜ.க.வின் பாதம் தாங்கி, "கொத்தடிமையாக" தரையில் ஊர்ந்து கொண்டிருக்கிறார் பழனிசாமி என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி குறித்து முதல்வர் முக ஸ்டாலின் விமர்சனம் செய்துளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது: 
 
தலைநகர் டெல்லியை ஒரு மாநகராட்சியைப் போலத் தரம் குறைக்கும் டெல்லி நிர்வாக மசோதா மாநிலங்களவையில் நிறைவேறிய நேற்றைய நாள், மக்களாட்சியின் கறுப்பு நாள்!
 
எதிர்க்கட்சி ஆட்சி செய்தால் அந்த மாநிலத்தைக் கூடச் சிதைப்போம் என்ற பாஜகவின் பாசிசம் அரங்கேறிய நாளை வேறு என்ன சொல்வது?
 
29 வாக்குகள் வித்தியாசத்தில் ஒரு நாட்டின் தலைநகரையே தரைமட்டத்துக்குக் குறைத்த சதிச் செயலுக்கான தண்டனையை டெல்லி மாநில மக்கள் மட்டுமல்ல, ஒட்டுமொத்த இந்திய மக்களும் விரைவில் தருவார்கள்!
 
மூன்று மாதமாக மணிப்பூர் எரிகிறது. அதை அணைக்க முடியாமல் , டெல்லியைச் சிதைக்கத் துடிக்கும் பா.ஜ.க.வின் தந்திரங்களை மக்கள் நன்கு உணர்ந்துள்ளார்கள்.
 
மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் மாநில முதலமைச்சரின் அதிகாரத்தைக் குலைக்கும் இந்த மசோதாவை, பேரறிஞர் அண்ணாவின் பெயரால் கட்சி நடத்தும் அடிமைக் கூட்டம் ஆதரித்து மாநிலங்களவையில் வாக்களித்திருப்பது எனக்கு அதிர்ச்சியளிக்கவில்லை.
 
"நான் யாருக்கும் அடிமையில்லை" என்றபடியே, பா.ஜ.க.வின் பாதம் தாங்கி, "கொத்தடிமையாக" தரையில் ஊர்ந்து கொண்டிருக்கிறார் பழனிசாமி என்பதையே இது வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தீர்மானங்கள் போட்டால் போதாது, மத்திய அரசுடன் இணக்கமாக இருக்க வேண்டும்: நயினார் நாகேந்திரன்

எதற்காக முதல்வருக்கு இவ்வளவு பதற்றம்.. அவுட் ஆப் கண்ட்ரோல் குறித்து தமிழிசை..!

அதிமுக எம்.எல்.ஏக்களுக்கு விருந்து வைக்கும் ஈபிஎஸ்.. என்ன காரணம்?

மதிமுகவின் முக்கிய பொறுப்பில் இருந்து விலகிய துரை வைகோ.. டிவி பார்த்து தெரிந்து கொண்டேன்.. வைகோ..!

ஜேஇஇ 2-ம் கட்ட முதன்மைத் தோ்வு முடிவுகள் வெளியீடு! 100% மதிப்பெண் பெற்றவர்கள் எத்தனை பேர்?

அடுத்த கட்டுரையில்
Show comments