Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிங்கப்பூர், ஜப்பான் பயணம் முடிந்தது: சென்னை திரும்புகிறார் முதலமைச்சர் ஸ்டாலின்

Webdunia
புதன், 31 மே 2023 (07:52 IST)
தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் சமீபத்தில் சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு அரசு முறை சுற்றுப்பயணம் செய்த நிலையில் தற்போது அவர் சென்னை திரும்ப உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 
 
மே 23ஆம் தேதி அரசு முறை பயணமாக சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு முதலமைச்சர் முக ஸ்டாலின் சென்றார் என்பதை ஏற்கனவே பார்த்தோம். சிங்கப்பூரில் இரண்டு நாட்கள் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட முதலமைச்சர் அதன்பின் ஜப்பான் சென்றார் என்பதும் ஜப்பானில் பல்வேறு நிகழ்ச்சிகளில் அவர் கலந்து கொண்டு முதலீட்டாளர்களை சந்தித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 
 
மேலும் சென்னையில் வரும் 2024 ஆம் ஆண்டு நடைபெறும் உலக முதலீட்டாளர் மாநாட்டிற்கு பங்கேற்க வருமாறு தொழிலதிபர்களுக்கு அவர் அழைப்பு விடுத்தார். மேலும் சில புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் கையெழுத்து இடப்பட்டதாக செய்திகள் வெளியானது. 
 
இந்த நிலையில் முதலமைச்சர் முக ஸ்டாலின் தனது சிங்கப்பூர் ஜப்பான் பயணத்தை முடித்துக் கொண்டு இன்று இரவு சென்னை திரும்ப உள்ளதாகவும் சென்னை திரும்பும் அவருக்கு அமைச்சர்கள் உற்சாக வரவேற்பு அளிக்க திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உளவுத்துறை பெண் அதிகாரி மர்ம மரணம்.. தண்டவாளத்தில் இருந்த பிணம்..!

9 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல் எப்போது? தேர்தல் ஆணையம் அறிவிப்பு..!

திகார் சிறையை மாற்ற முடிவு.. டெல்லி முதல்வர் அறிவிப்பு..!

கவர்னரை புகழ்ந்து பேசுவது தவறு இல்லையா? நடிகர் பார்த்திபனுக்கு விசிக கண்டனம்..!

ஈபிஎஸ் யாரை பார்க்க செல்கிறார் என்பது எனக்கு தெரியும்: சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின்..!

அடுத்த கட்டுரையில்
Show comments