Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட யுவன்ஷங்கர் ராஜாவின் ஒலிம்பிக் பாடல்: இணையத்தில் வைரல்!

Advertiesment
முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட யுவன்ஷங்கர் ராஜாவின் ஒலிம்பிக் பாடல்: இணையத்தில் வைரல்!
, செவ்வாய், 27 ஜூலை 2021 (07:57 IST)
தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் யுவன்சங்கர்ராஜா இயற்றிய ஒலிம்பிக் பாடலை வெளியிட்ட நிலையில் அந்த பாடல் தற்போது வைரலாகி வருகிறது
 
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் தற்போது ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன என்பது தெரிந்ததே. இந்த போட்டியில் நூற்றுக்கும் மேற்பட்ட இந்திய வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் கலந்து கொண்டு வருகின்றனர். இதுவரை இந்தியாவுக்கு ஒரு வெள்ளிப் பதக்கம் கிடைத்துள்ள நிலையில் இன்னும் சில பழக்கங்கள் கிடைக்கும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது
 
இந்த நிலையில் ஒலிம்பிக் வீரர்களை ஊக்குவிக்கும் வகையில் ஏற்கனவே இசைப்புயல் ஏஆர் ரகுமான் அவர்கள் ஒரு சில பாடல்களை இயற்றி அதனை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்திருந்தார் என்பதும் அந்தப் பாடல்கள் மிகப் பெரிய அளவில் வைரல் ஆனது என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
அந்தவகையில் தற்போது பிரபல இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவும் ஒலிம்பிக் பாடலொன்றை கம்போஸ் செய்து அவரே பாடியுள்ளார். இந்த பாடலை தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது 
 
ஒலிம்பிக்கில் வெற்றி பெற்ற தாய் நாட்டுக்கும் தமிழ் நாட்டுக்கும் பெருமை சேர்க்கும் வீரர்களை உற்சாகப்படுத்தும் விதமாக உருவாக்கியுள்ள வென்று வா வீரர்களே என்ற பாடலை வெளியிட்டேன் என்று அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பயனில்லாமல் இருக்கும் 2000 கிலோ தங்கம்: அமைச்சர் சேகர்பாபுவின் அதிரடி திட்டம்