ஆந்திர பெண்ணை காவலர்களே பாலியல் பலாத்காரம்.. முதல்வர் ஸ்டாலின் வெட்கப்பட வேண்டும்: அண்ணாமலை

Siva
புதன், 1 அக்டோபர் 2025 (14:07 IST)
திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆந்திராவை சேர்ந்த பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் இந்த சம்பவத்திற்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வெட்கப்பட வேண்டும் என அண்ணாமலை கூறியுள்ளார்.
 
இதுகுறித்து அண்ணாமலை வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில் கூறியிருப்பதாவது: "திருவண்ணாமலை ஏந்தலில் ஆந்திர மாநிலப் பெண்ணைக் காவலர்களே பாலியல் வன்கொடுமை செய்த விவகாரம், காவல்துறையினரே இத்தகைய குற்றச் செயல்களில் ஈடுபடும் அளவுக்குத் தமிழ்நாட்டில் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை என்பதைக் காட்டுகிறது."
 
மேலும், "குற்றவாளிகளைப் பாதுகாக்கும் நோக்குடனே செயல்படும் திமுக அரசால், பெண்கள் வெளியே செல்லவே அச்சப்படும் சூழல் உள்ளது. இதற்கெல்லாம் காவல்துறையைத் தன் கையில் வைத்திருக்கும் முதல்வர் மு.க. ஸ்டாலின் வெட்கப்பட வேண்டும்," என்று அண்ணாமலை கூறியுள்ளார். 
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பல மாதங்களாக வேலை தேடியும் கிடைக்கவில்லை.. கண்ணீருடன் அமெரிக்காவில் இருந்து வெளியேறிய இந்திய பெண்..!

ரெப்போ வட்டி விகிதத்தில் எந்த மாற்றமும் இல்லை.. இந்திய ரிசர்வ் வங்கி அறிவிப்பு..!

ட்ரம்ப் விதித்த வரியால் இந்தியாவின் வளர்ச்சியில் சிறு சரிவு! - ஆசிய வளர்ச்சி வங்கி!

வலுவடைந்தது காற்றழுத்த தாழ்வு பகுதி.. காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது.. கனமழைக்கு வாய்ப்பா?

புஸ்ஸி ஆனந்தை கைது செய்ய 3 தனிப்படைகள்! - எங்கே இருக்கிறார் புஸ்ஸி ஆனந்த்?

அடுத்த கட்டுரையில்