Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

குவைத் அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து.. தமிழக முதல்வரின் முக்கிய உத்தரவு

Advertiesment
Stalin

Siva

, வியாழன், 13 ஜூன் 2024 (08:36 IST)
குவைத் நாட்டில் அடுக்கு மாடி கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக 41 இந்தியர்கள் பலியானதாக கூறப்படும் நிலையில் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் இது குறித்து புதிய உத்தரவை பிறப்பித்துள்ளார். இது குறித்து தமிழக முதல்வர் முக ஸ்டாலின் தனது சமூக வலைத்தளத்தில் கூறியிருப்பதாவது:

வைத் நாட்டின் மங்காப்  நகரில் தொழிலாளர்கள் தங்கியிருந்த கட்டடத்தில் நேற்று ஏற்பட்ட தீவிபத்தில் 40-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் உயிரிழந்திருப்பதாக வந்த செய்தியறிந்து மிகுந்த அதிர்ச்சிக்கும் வேதனைக்கும் உள்ளானேன்.

உயிரிழந்தோர் அனைவரின் குடும்பங்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் கனத்த இதயத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

இதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த தொழிலாளர்கள் யாரேனும் உள்ளனரா என்ற தகவலைச் சேகரிக்கும்படி அயலகத் தமிழர் நலன் மறுவாழ்வுத்துறை ஆணையரகத்துக்கு உத்தரவிட்டுள்ளேன்.

காயமடைந்த அனைவரும் குவைத் நாட்டின் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்திய வெளியுறவு அமைச்சகம், குவைத் நாட்டிலுள்ள இந்தியத் தூதரகம் மற்றும் அங்குள்ள தமிழ் அமைப்புகளுடன் தொடர்ந்து தொடர்பில் இருந்து வருகிறது.

இவ்விபத்து தொடர்பான விவரங்களுக்கு அயலகத் தமிழர் நலத்துறையின் கீழ்க்காணும் எண்களைத் தொடர்பு கொள்ளவும்:

இந்தியாவிற்குள்: +91 1800 309 3793

வெளிநாடு: +91 80 6900 9900, +91 80 6900 9901


Edited by Siva
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

குவைத் தீ விபத்து.. மத்திய அரசுக்கு கமல்ஹாசனின் முக்கிய வேண்டுகோள்..!